முடிவுக்கு வந்த பஞ்சாயத்து... 'ஜாய் கிறிஸில்டா குழந்தைக்கு தந்தை நான் தான்': ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்!

மாநில மகளிர் ஆணைய விசாரணையில் ஜாய் கிறிஸில்டா குழந்தைக்கு நான் தான் தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

மாநில மகளிர் ஆணைய விசாரணையில் ஜாய் கிறிஸில்டா குழந்தைக்கு நான் தான் தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
joy

'மெஹந்தி சர்க்கஸ்' திரைப்படம், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மற்றும் தனது கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தச் சூழலில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2023-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகக் காவல்துறையில் புகார் அளித்தார். திருமணத்திற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ரங்கராஜின் வற்புறுத்தலால் பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். 

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரை பொது வெளியில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, ஜாய் கிறிஸில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், நான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் தொழில் செய்ய முடியவில்லை. என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனவே, எனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6,50,000 பராமரிப்புச் செலவுத்தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஜாய் கிறிஸில்டாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்த அவர், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று பதிவிட்டிருந்தார். மேலும், குழந்தையின் புகைப்படத்தை ஸ்டோரியில் பகிர்ந்து, (முகத்தை மறைத்து) அப்பாவின் முக ஜாடையை அப்படியே உரித்து வைத்திருக்கிறார் (Carbon copy of his father's face) என்றும் குறிப்பிட்டிருந்தார். தனது எக்ஸ் தளப் பதிவில், ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

joy 1

இந்நிலையில், ஜாய் கிறிஸில்டாவை தான் திருமணம் செய்து கொண்டதை மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து, ஜாய் கிறிஸில்டா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில், எனது முன்னாள் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ், என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும், இந்தக் குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்" என்றுத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

Madhampatty Rangaraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: