/indian-express-tamil/media/media_files/2025/10/02/madhampatty-rangaraj-2025-10-02-13-10-05.jpg)
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சை, அவரது முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளின் அடுத்தடுத்த சமூக ஊடகப் பதிவுகளால் மீண்டும் சூடுபிடித்து, தமிழ்நாட்டு மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. தனது முதல் மனைவி ஸ்ருதியை சட்டப்படி விவாகரத்து செய்யாமலேயே, ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுதான் இந்த விவகாரத்தின் மையப்புள்ளி.
இதில், இரண்டாவது மனைவியான ஜாய் கிரிஸில்டா கர்ப்பமான சில காலத்திலேயே ரங்கராஜ் அவரை விட்டு விலகியதாகக் கூறப்படுவதுதான் தற்போதைய பரபரப்புக்குக் காரணம். இதனால் மனமுடைந்த ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்தச் சூழலில், ஜாய் கிரிஸில்டா ஒரு பேட்டியில், "இந்த இரண்டாவது திருமணம் குறித்து ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதிக்குத் தெரியும்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். ஜாய் கிரிஸில்டாவின் பேட்டி மற்றும் புகார் குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுவரை அமைதி காத்து வந்த முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ், முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.
ஸ்ருதி ரங்கராஜின் பதிவு:
அதில், "நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாவிகள்தான். நமக்கு வசதியான பாவங்களைத் தேர்ந்தெடுக்கிறோம், நமக்கு வசதி இல்லாத பாவங்களைச் செய்யும் மற்றவர்களை நியாயந்தீர்க்கிறோம்" என்ற சூஃபி ஞானியின் வாசகத்தைப் பகிர்ந்திருந்தார்.
இந்தப் பதிவு, ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா அல்லது பொதுச் சமூகம் என யாரையும் நேரடியாகக் குறை கூறாமல், "யாரையும் நியாயந்தீர்க்காதீர்கள்" என்று பொதுவான ஒரு கருத்தைச் சொல்வது போல் இருந்ததால், இது ஒரு முக்கியமான குறியீடாகப் பார்க்கப்பட்டது.
ஜாய் கிரிஸில்டாவின் பதிவு:
"மனிதர்கள் நாடகம் நிறைந்தவர்கள்" - ஸ்ருதியின் இந்தப் பதிவு வெளியாகிச் சில நாட்களே ஆன நிலையில், தற்போது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா, தான் தாயாகப் போகும் மகிழ்ச்சியையும், கணவரின் பிரிவால் ஏற்பட்ட வேதனையையும் வெளிப்படுத்தும் விதமாக மற்றொரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
தான் விரைவில் தாயாகப் போவதைக் குறிக்கும் வகையில் கைகளில் அதிகமான வளையல்களை அணிந்தபடி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு (மாதம்பட்டி ராகா ரங்கராஜ்) இன்னும் சில வாரங்களில் உலகம் பிறக்கப் போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
"அவளுக்கு (பிறக்கப் போகும் குழந்தைக்கு), மனிதர்கள் நாடகம் நிறைந்தவர்கள், மனிதர்கள் சூழ்நிலைவாதிகள், இந்த மனிதர்கள் எப்போதும் காரண காரியவாதிகளைப் போல் செயல்படுவார்கள் என்றெல்லாம் தெரியாது. அவள் நம் மனிதர்களை எப்போதுமே நம்புவாள்."
இந்தப் பதிவு, தான் விரைவில் தாயாகப் போகும் மகிழ்ச்சியில் இருந்தாலும், கணவர் தன்னை விட்டு விலகிச் சென்றதன் கசப்பான அனுபவத்தையும், மனிதர்கள் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி மாறிவிடுவார்கள் என்ற உண்மையைச் சுட்டிக் காட்டுவது போல அமைந்துள்ளது.
ஸ்ருதியின் "பாவிகள்" என்ற பதிவுக்கு, "மனிதர்கள் நாடகம் நிறைந்தவர்கள்" என்று ஜாய் கிரிஸில்டா பதில் கொடுத்திருக்கிறாரா? அல்லது, தனது குழந்தைக்குத் தன் கணவரைப் பிரிந்த சோகத்தைச் சுட்டிக் காட்டுகிறாரா? என்ற கேள்விகளை இந்த உருக்கமான பதிவு ரசிகர்கள் மத்தியிலும், பொதுச் சமூகத்திலும் எழுப்பியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.