சென்னை தினம் கொண்டாடும்போது இந்த 6 பாடல்களை கேட்காவிட்டால் எப்படி?
சென்னையின் புகழையும், அதன் வளர்ச்சியையும் எடுத்துக்கூறும் விதமாக தமிழ் சினிமாவில் பல பாடல்கள் உள்ளன. அவற்றில் 6 பாடல்களை நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டும்.
சென்னையின் புகழையும், அதன் வளர்ச்சியையும் எடுத்துக்கூறும் விதமாக தமிழ் சினிமாவில் பல பாடல்கள் உள்ளன. அவற்றில் 6 பாடல்களை நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டும்.
சென்னையையும் சினிமாவையும் நாம் பிரித்துப் பார்க்க முடியாது. சென்னையின் புகழையும், அதன் வளர்ச்சியையும் எடுத்துக்கூறும் விதமாக தமிழ் சினிமாவில் பல பாடல்கள் உள்ளன. அவற்றில் இந்த 6 பாடல்களை நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டும்.
1. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்:
1967-ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அனுபவி ராஜா அனுபவி. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையும், கண்ணதாசனின் வரிகளும் இந்த திரைப்படத்திற்கு உயிர்சேர்த்திருக்கும். இந்த பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருக்கிறார். முதன்முறையாக சென்னைக்கு புதிதாக வந்திருக்கும் நாகேஷ், தன் அனுபவத்தை பாடலாக பாடுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வேகமாக இயங்கும் மனிதர்கள் குறித்தான வரிகள் இப்பாடலில் இடம்பெற்றிருக்கும்.
Advertisment
Advertisements
2. மெட்ராஸ சுத்திப் பார்க்கப் போறேன்:
1994-ஆம் ஆண்டு வெளிவந்த மே மாதம் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இப்படத்தின் இசையமைப்பாளர். இந்த நகரத்தை பற்றி நினைக்கும்போது இந்த பாடலை தவிர்த்துவிட்டு நினைக்க முடியாது. கொஞ்சம் நகைச்சுவை கலந்த வரிகளுடன் இப்பாடலை வைரமுத்து எழுதியிருப்பார். மெட்ராஸின் வாழ்க்கையை உணர்த்தும் வகையிலான வரிகள் இதில் இடம்பெற்றிருக்கும். “மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர், ஆனா ஸ்டைல்னா இப்போ குடி மினரல் வாட்டர்", "சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ், காதல் பைத்தியம் என்றால் மெட்ராஸ்”, போன்ற வரிகளை நாம் தவிர்க்க முடியாது.
3.வணக்கம் வாழ வைக்கும் சென்னை:
2012-ஆம் ஆண்டில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் விளம்பரத்திற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டது. சென்னை மீதான காதல், வெறுப்பு இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் அமைந்தது. மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வரிகள், சென்னை மீதான காதலை இன்னும் அதிகப்படுத்தும். வெளியூர்களில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்தவர்களுக்கு இந்நகரம் எப்படிப்பட்டது என்பதை இப்பாடல் உணர்த்தும்.
4.சென்னை சிட்டி கேங்ஸ்டா:
2013-ஆம் ஆண்டில் வெளிவந்த வணக்கம் சென்னை திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத். ராப் பாடகர்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஹர்த் கவுர் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளனர். வட இந்தியர்களுக்கு சென்னையின் பெருமையை உணர்த்தும் வகையிலும், சென்னைக்கு இளைஞர்கள் மரியாதை செலுத்தும் வகையிலும் இப்பாடல் அமைந்தது.
5. எங்க ஊரு மெட்ராசு:
2014-ஆம் ஆண்டு வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் வட சென்னையின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் அமைந்தது. மேடை நிகழ்ச்சிகள், கானா பாடல்கள், கால் பந்து, அரசியல், ஆகியவற்றை அழகாக வெளிக்கொண்டு வந்த இப்பாடலுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
6.புறம்போக்கு பாடல்:
கர்நாடக இசையும் சென்னையையும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. கர்நாடக இசைப்பாடகர் இப்போதைய சென்னையை பிரதிபலிக்கும் வகையில், கர்நாடக இசையில் இப்பாடலை பாடினார்.
சென்னை நகரத்தின் வளர்ச்சியில் உள்ள அரசியல் குறித்து இப்பாடல் பேசியது.