ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதுர வீரன்’. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மீனாட்சி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, பால சரவணன், மைம் கோபி, மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நாளை இந்தப் படம் ரிலீஸாகிறது.
