நடிகை ஜோதிகா நடித்தும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘மகளிர் மட்டும் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவிருக்கிறது. இந்த சமயத்தில், படத்தின் குறிப்பிட்ட காட்சியின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகைகள் ஜோதிகா, ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருக்கும் ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தை ‘குற்றம் கடிதல்’ திரைப்படத்தை இயக்கிய பிரம்மா இயக்கியுள்ளார். இதனை, நடிகர் சூர்யாவின் ‘2டி எண்டர்டெய்ன்மெண்ட்’ தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பள்ளி கால தோழிகள் மூன்று பேர், 38 வருடங்களுக்கு பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் அத்தனை வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆண்களால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் இடர்பாடுகளை வெளிக்கொணரும் திரைப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படம் இன்னும் ஒரு நாளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தில் வரும் ஒரு காட்சியின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.
அதில், மாட்டை தொடுவதற்கு நடிகைகள் பானுப்பிரியா, சரண்யா, ஊர்வசி ஆகிய மூவருமே பயப்படுகின்றனர். இயக்குநர் பிரம்மா அவர்கள் பயமில்லாமல் நடிக்க கற்றுத் தருகிறார்.
Here it is #MagalirMattumMakingVideo #MagalirMattumIn3Days #MagalirMattum #Jyothika #urvashi #bhanupriya #saranya pic.twitter.com/S317NxcmLZ
— CINEMAKARAN (@cinema_karan) 12 September 2017