/tamil-ie/media/media_files/uploads/2018/08/BIGG-BOSS-TAMIL-2-MAHAT.jpg)
BIGG BOSS TAMIL 2 MAHAT, பிக் பாஸ் தமிழ் 2
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இன்று நடைபெரும் எபிசோடில் யாஷிகா மீது காதல் இருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார் மகத். இதற்கு சரியான கேள்வி கேட்கிறார் பாலாஜி.
பிக் பாஸ் தமிழ் 2 : மகத் - யாஷிகா இடையே என்ன தான் நடக்குது:
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே மகத் - யாஷிகா ஊடல் பிரச்சனை ஒரு புரியாத புதிராக இருந்து வந்தது. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மகத் மீது காதல் இருந்தது உண்மைதான் என்றும், வயதின் காரணமாக அது நடந்ததாக எண்ணி விரைவில் கடக்க முயற்சி செய்வதாக யாஷிகா கமல் ஹாசனிடம் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் எபிசோடில், ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. கடந்த வாரம் நடந்த கோர்ட் டாஸ்க் இந்த வாரமும் நடைபெறுகிறது. இந்த வாரத்தின் தலைவரான யாஷிகா, நீதிபதியாக அமர்ந்திருக்கிறார். அப்போது விசாரணை கூண்டில் மகத் நிருத்தப்பட்டுள்ளார்.
August 2018எது நிஜம்?! ???????? #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil#VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/uE1is7Oxll
— Vijay Television (@vijaytelevision)
எது நிஜம்?! ???????? #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil#VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/uE1is7Oxll
— Vijay Television (@vijaytelevision) August 21, 2018
இருவர் இடையே இருக்கும் காதல் குறித்த குற்றச்சாட்டுகளை சரமாறியாக கேள்வியாக எழுப்புகிறார் யாஷிகா. அப்போது ‘உன் மீது காதல் இருந்தது உண்மைதான்’ என்று பகீரங்கமாக தெரிவிக்கிறார் மகத். இதனை கேட்ட பாலாஜி ஷாக் ஆக, ‘வெளியே இருக்குறதையும் சந்தோஷப்படுத்தனும்... உள்ள இருக்குறதையும் பாக்கனும்... அப்போ இதுல எது நிஜம்?’ என நறுக்குனு ஒரு கேள்வி கேட்கிறார்.
இதற்கு என்ன பதில் கூறுவார் மகத்?? காத்திருப்போம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.