இனி அவன் என் வாழ்வில் இல்லை : துரோகத்தால் கொந்தளித்த மகத் காதலி

author-image
Vaishnavi Balakumar
புதுப்பிக்கப்பட்டது
New Update
mahat girlfriend break up, மகத்

mahat girlfriend break up, மகத்

பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் இருக்கும் மகத் நேற்று நடந்த நிகழ்ச்சியில் யாஷிகாவை காதலிப்பது உண்மை என்று ஒப்புக்கொண்டார். இதனால் அவரின்  காதலி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

மகத் - யாஷிகா உறவு... கிழிந்தது முகத்திரை:

Advertisment

இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் முதலே யாஷிகா - மகத் இடையே நெருக்கமான உறவு நிலவி வருகிறது. முதலில் இதை வயது கோளாறு என நினைத்து இருவரையும் அந்த வீட்டில் இருக்கும் பலரும், இது தேவையில்லை என்று அறிவுறுத்தினர். மேலும் மகத்திற்கு ஏற்கனவே வெளியே காதலி இருப்பதால் இந்த உறவு தவறு என்றும் பலரும் எச்சரித்தனர்.

இது குறித்து முன்னதாக கமல் ஹாசன் கேட்டார். அதற்கு பதிலளித்த மகத், ‘எனக்கு அப்படி இல்லை... என்னை நம்பி தப்பே பண்ணாத ஒரு உயிர் வெளியே காத்திருக்கிறது’ என்றார். இவரின் இந்த பதிலால் யாஷிகா மனமுடைந்தார். இதனை நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் தெரிந்துக்கொண்டனர்.

உன் மீது காதல் இருப்பது உண்மை : மகத்தின் வாக்குமூலம் ! நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி

Advertisment
Advertisements

இந்நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் இது குறித்து கேள்வி எழுப்பிய யாஷிகாவிடம் காதல் இருப்பது உண்மை என ஒப்புக்கொண்டார். அதே நேரம் வெளியே இருக்கும் பெண் மீதும் காதல் உள்ளது என்று கூறுகிறார்.

August 2018

இந்த நிகழ்வுக்கு பிறகு, மகத்தின் காதலியான பிராச்சி மிஷ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

mahat girlfriend, மகத் பிராச்சி பதிவு....

அதில், “மகத் இப்போது யாஷிகாவை காதலிக்கிறார். அந்த உண்மை வெளியாகிவிட்டது. இனி அவன் என் வாழ்க்கையில் இல்லை. இதை அவர் பிக் பாஸ் விட்டு வெளியே வந்ததும் பேசி தீர்த்துக் கொள்வோம்” என்று கூறியிருக்கிறார். ஆனால் திடீரென இந்த பதிவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார்.

Bigg Boss Tamil Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: