மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் 'ஸ்பைடர்' டீசர்! மிரட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்!

ஸ்பைடர் படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகியுள்ளது

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுகு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப் படம் ‘ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

‘கத்தி’ படத்திற்கு பிறகு முருகதாஸ் இயக்கும் படம் என்பதாலும், டப்பிங் எதுவும் இல்லாமல் சொந்தக் குரலில் மகேஷ் பாபு தமிழில் பேசி நடித்திருப்பதாலும் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்தில் வெளியான டைட்டில் டீசர், ‘பூம் பூம்’ பாடல் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுகு டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம் போல் மேக்கிங்கில் மிரட்டியுள்ளார் இயக்குனர் முருகதாஸ். இப்படத்தில் வில்லனாக அதகளப்படுத்தியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, டீசரில் பேசும் ஓபனிங் வசனமே படத்தின் மீது எக்ஸ்பெக்டேஷனை வேறு லெவலுக்கு கொண்டுச் செல்கிறது.

மேலும் இப்படத்தில் ரகுல் பரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு முருகதாஸ் – ஹாரிஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ஆல்பம் ஷ்யூர் ஹிட் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

×Close
×Close