/indian-express-tamil/media/media_files/2025/10/01/robos-2025-10-01-15-33-10.jpg)
ரோபோ சங்கர் கடைசியா வாங்கிய சம்பளம் ரூ. 1 லட்சம்... முதலில் வாங்கியது இவ்வளவு தான்: மேனேஜர் பிரேம்நாத் ஓபன்!
விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களை தன்வசப்படுத்திய ரோபோ சங்கர், அதன்பிறகு ’அது இது எது’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று காமெடியில் கலக்கினார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றிருந்தார்.
ரோபோ சங்கர், விஜய் டிவி நடத்திய நடன நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். 1997-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ’தர்மசக்கரம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரோபோ சங்கர் அறிமுகமானார்.
அடுத்து ’படையப்பா’ படத்தில் டான்சராகவும், ’ஜூட்’, ’ஏய்’, ’கற்க கசடற’, ‘ தீபாவளி’, ’மதுரை வீரன்’, ’ரௌத்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். இதில் ’ரௌத்திரம்’ படத்தில் அவர் நடித்த காட்சிகள் இம்பெறவில்லை.
அதன் பின்னர் ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபல காமெடி நடிகராக வலம் வந்தார். சமீபத்தில் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவினால் காலமானார்.
இவரது மறைவு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் குறித்து நாட்டியாலையா பிரேம்நாத் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, " கடந்த 2000-ஆம் ஆண்டு முதன் முதலில் ரோபோ சங்கரை நான் சந்தித்தேன்.
ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா எங்களது குழுவில் இருந்தார். அப்போது பிரியங்கா, ரோபோ சங்கரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை. ரோபோ சங்கர் உடம்பில் பெயிண்ட் பூசிக் கொண்டு நடிப்பார் என்றார்.
பெயிண்ட் பூசிக் கொண்டு வந்த வீடியோ எல்லாம் ரோபோ சங்கர் காண்பித்தார். கோடம்பாக்கத்தில் ஒரு கோயிலில் நிகழ்ச்சி பண்ண வேண்டும் என்பதற்காக பிரியங்கா, ரோபோ சங்கரை அழைத்து வந்தார். அந்த நேரம் எங்கள் குழுவில் 50 பேர் இருந்தார்கள்.
அதன்பின்னர், உடம்பில் பெயிண்ட் எல்லாம் பூசிக் கொண்டு ரோபோ சங்கர் கோடம்பாக்கத்தில் உள்ள கோயிலில் நிகழ்ச்சி நடத்தினார். நிகழ்ச்சி முடிந்து வந்ததும் நான் ஒரு 100 ரூபாய் கொடுத்தேன்.
அதன்பிறகு என் நிகழ்ச்சி எல்லாம் ரோபோ சங்கருக்கு கொடுத்தேன்.
அப்படி 2000-ஆம் ஆண்டு முதல் 25 வருடங்கள் ரோபோ சங்கர் என்னுடன் பயணித்திருக்கிறார். எனக்கு அதிக நிகழ்ச்சியும் செய்து கொடுத்திருக்கிறார். ரோபோ சங்கர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட மூன்று நிகழ்ச்சி செய்து கொடுத்தார்.
கடைசியாக யாழ்பாணத்தில் உள்ள ஒரு முருகர் கோயில் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். ரோபோ சங்கர் கடைசியாக சம்பளமாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கினார்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.