/indian-express-tamil/media/media_files/2025/10/31/manirathnam-tennise-joseph-2025-10-31-16-06-49.jpg)
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக மணிரத்னம், நாகார்ஜுனா நடித்த 'கீதாஞ்சலி' (1989) மற்றும் ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' (1991) என தனது கிளாசிக் படங்களுக்கு இடையில், 1990 ஆம் ஆண்டில் 'அஞ்சலி' திரைப்படத்தை இயக்கினார். சுவாரஸ்யமாக, இந்தப் படத்தின், பாதியிலேயே விலகிச் சென்ற மலையாள திரைக்கதை எழுத்தாளர் டென்னிஸ் ஜோசப்பை மணிரத்னம் 'இனிமையாகப் பழிவாங்கியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:
சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான ஜோசப், சஃபாரி டிவிக்கு அளித்த ஒரு பேட்டியில், 'அஞ்சலி' படத்திற்காக மணிரத்னத்துடன் தான் இணைந்து பணியாற்றியதையும், அந்தத் திட்டத்திலிருந்து தான் பாதியில் விலக வேண்டியதையும் நினைவு கூர்ந்தார். "ஆட்டிசம் குறைபாடுள்ள ஒரு குழந்தையும், அதனால் அந்தக் குடும்பம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்ற கதைக்கருவை மணிரத்னம் என்னிடம் கூறினார். அது முழுவதும் அவர் மனதில் இருந்தது. அவர் அதை எழுதினால் போதும்.
'நாயகன்' போன்ற ஒரு கிளாசிக் திரைக்கதை எழுதியவருக்கு, என்னைப் போன்ற ஒருவர் ஏன் தேவை என்று நான் கேட்டேன். ஆனால் அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. 'ஷோலே' படத்திற்குப் பிறகு, என்னுடைய 'நியூ டெல்லி' திரைக்கதையைத்தான் இந்திய சினிமாவின் சிறந்த வணிக ரீதியான திரைக்கதையாக அவர் கருதுவதாகச் சொன்னார். 'நாயகன்' படத்தின் எழுத்தாளரிடமிருந்து அதைக் கேட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
அதே சமயம், தமிழில் எனக்குச் சரளமில்லை என்றாலும், வேலைப்பளு இருந்தாலும், 'அஞ்சலி' படத்தின் திரைக்கதையை எழுத ஒப்புக்கொண்டேன். அந்த நேரத்தில், என் நண்பரும் இயக்குனருமான ஜோஷியுடன், மோகன்லால் நடித்த ஒரு படம் தயாராகி வந்தது. கடைசி நிமிடத்தில் திரைக்கதைக்காக ஆள் தேடிக்கொண்டிருந்த ஜோஷி, என்னிடம் வந்து தயவுசெய்து இந்தச் சூழ்நிலையில் உதவ வேண்டும் என்று கெஞ்சினார். அதனால், மணிரத்னம் படத்திலிருந்து விலகி, இந்தப் படத்திற்காக வேலை செய்ய வேண்டியிருந்தது.
அதுதான் பின்னாளில் கிளாசிக் மல்டி-ஸ்டார் மலையாள த்ரில்லர் படமான, மம்மூட்டியும் மோகன்லாலும் முன்னணி வேடங்களில் நடித்த 'நம்பர் 20 மெட்ராஸ் மெயில்' ஆக மாறியது. மணிரத்னம் படத்தைக் கைவிட்டது தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எனக்கு வருத்தமாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் இருவரும் இணக்கமாகப் பணியாற்றத் தொடங்கினோம், மேலும் அவர் என் மீது நம்பிக்கை வைத்து திரைக்கதையை எழுதச் சொன்னதால் மிகவும் நிம்மதியாக உணர்ந்தார். திரும்பிப் பார்க்கும்போது, அது என் தரப்பில் ஒரு தொழில்முறைத் தவறு. நான் விலகிய செய்தியைக் கேட்டு மணிரத்னம் மிகவும் வருத்தமடைந்தார், ஆனால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதுதான் என்னுடைய நிலைமை.
சில மாதங்களுக்குப் பிறகு, 'அஞ்சலி' திரைப்படம் வெளியானபோது, ஒரு நாள் மணிரத்னம் எனக்கு போன் செய்து, முடிந்தால் தியேட்டரில் போய்ப் படத்தைப் பார்க்கச் சொன்னார். அவர் படத்துல எனக்கு எதிராக ஒரு சின்ன 'பழிவாங்கல்' செய்திருப்பதாகக் கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் ஷோவுக்குச் சென்று பார்த்தேன். அங்கே பிரபு நடித்த, எரிச்சலூட்டும், மர்மமான கொலையாளி கேரக்டர் தான் இருந்தது. ஒரு காட்சியில், அவனைக் கண்டு பயந்த குழந்தைகள் அனைவரும் பின்னால் நிற்க, ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை பார்த்து, 'இவனுடைய பெயர் டென்னிஸ் ஜோசப், இவன் ஒரு பெரிய கொலையாளி!' என்று சொல்கிறது.
நீங்கள் இப்போது அந்தப் படத்தைப் பார்த்தாலும், அந்தக் கேரக்டருக்கு என் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதுதான் மணிரத்னம் எனக்கு எதிராக எடுத்த இனிமையான பழிவாங்கல்" என்று டென்னிஸ் ஜோசப் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us