/indian-express-tamil/media/media_files/2025/10/19/mari-2025-10-19-13-49-00.jpg)
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ என பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். தற்போது ‘பைசன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் 17-ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் முன்னோட்ட விழாவில், ’பைசன்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தது மனத்தி கணேசன் தான். என்னுடைய ஹீரோவாக இருந்த இவரைத்தான் சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்தேன். கபடி விளையாட்டுக்காக, இவருக்காக சிறுவயதில் நான் போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். அவரின் கதையை வைத்து படம் எடுக்கப்போகிறேன் என அனுமதி கேட்டதும், என்னை நம்பி எனக்கு ஒத்துழைப்பை கொடுத்தார் கணேசன்.
நேர்மையான உழைப்புடன் பல போராட்டங்களைத் தாண்டி முன்னேறி வந்த இளைஞர்களின் கதையை எனது அரசியல் பார்வையில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன் என்று மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார். ’பைசன்’ திரைப்படத்தை பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ராம், பா. இரஞ்சித் உட்பட பலர் மாரி செல்வராஜை பாராட்டினர். ‘பைசன்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் திரையரங்கில் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘பைசன்’ திரைப்படத்தின் புக்கிங் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ’பைசன்’ திரைப்படம் ரிலீஸான இரண்டு நாட்களில் 95 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இப்படத்தின் வசூலும் முதல் நாளை விட இரண்டாம் நாள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
#BisonKaalamaadan Day 2 Big Jump In Bookings 95K Tickets Sold In last 24 Hours 👍 pic.twitter.com/clnr1cV2jx
— Karthik Ravivarma (@Karthikravivarm) October 19, 2025
விக்ரமின் மகன் என்ற அடையாளத்துடன் திரைத்துறையில் நுழைந்த துருவ் விக்ரம் ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து, விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விக்ரமின் சினிமா கேரியருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.