Advertisment
Presenting Partner
Desktop GIF

'நண்பர்' அஜித் போல உடை அணிய நினைத்த விஜய்: மாஸ்டர் ஆடியோ லான்ச் ஹைலைட்ஸ்

Master Audio Launch Vijay Speech Live : மாஸ்டர படத்தின் இசை வெளியீட்டு விழா லைவ்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Master Audio Launch Vijay Speech Live Updates

Master Audio Launch Vijay Speech Live Updates

Master Audio Launch Actor Vijay Speech Updates: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ' மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மார்ச்.15) சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இருப்பினும் சன் டிவியில் நிகழ்ச்சியை லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Advertisment

விஜய் நிறைய பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அளவோடு பேச்சை நிறுத்திக் கொள்ள, யாரும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி கன்டென்ட்களை அள்ளித் தெளித்துவிட்டார்.

Live Blog

MASTER Audio Launch Vijay Speech Live Updates, Sun Tv Live Telecast : மாஸ்டர் இசை வெளியீட்டு விழா லைவ்














Highlights

    22:46 (IST)15 Mar 2020

    சைலன்ட் மோடில் விஜய்

    20 வருடத்துக்கு முந்தைய இளைய தளபதியிடம், இப்போது உள்ள தளபதி என்ன கேட்க விரும்புகிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய், "அப்போதிருந்த விஜய் எந்த ரெய்டும் இல்லாமல் அமைதியாக இருந்தார்' என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது. 

    இறுதியில், விஜய் சேதுபதிக்கு விஜய் முத்தம் கொடுக்க நிகழ்ச்சி இனிதே முடிந்தது. 

    22:40 (IST)15 Mar 2020

    நதி போல செல்ல வேண்டும் - விஜய்

    "எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே. நீ நதிபோல ஓடிக் கொண்டிரு" என்ற பாடல் என் படத்தில் உள்ளது. அதில், வரும் நதியில் சிலர் விளக்கு வைத்து வணங்குவார்கள். சிலர் பூப் போட்டு வரவேற்பார்கள். சிலர் கல் எறிவார்கள். ஆனால், நதி மட்டும் போய்க் கொண்டே இருக்கும். அது போல தான் நாமும் இருக்க வேண்டும்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

    22:34 (IST)15 Mar 2020

    விஜய் ஸ்பீச்...

    என்னுடைய மாமாவும், இந்தப் படத்தின் தயாரிப்பாளருமான பிரிட்டோ என்னுடைய ஆரம்ப கால படங்களில் மிகவும் சப்போர்ட்டிவாக இருந்தார். 

    படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சர்பிரைஸ் தான். அவரது மாநகரம் படம் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன். அவர் கைகளில் சீன் பேப்பரே இருக்காது. இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். பிறகு, அவரை கூப்பிட்டு இனி எல்லோர் கையிலும் சீன் பேப்பர் இருக்க வேண்டும் என்று சொல்லிய பிறகு தான் மாறினார். 

    22:29 (IST)15 Mar 2020

    மேடையில் விஜய்....

    ரசிகர்களை பார்த்து உற்சாகமான விஜய் சாந்தனுவையும், அனிருத்தையும் அழைத்து நடனமாடினார். பின்னர் பேசுகையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கு வணக்கம். சிம்ரன் ஜி-க்கு முதலில் மிகப்பெரிய நன்றி. மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் ரசிகர்கள் கலந்து கொள்ளாமல் போனதில் எனக்கு தான் மிகப்பெரிய வருத்தம். அரை மனசோடு தான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். கத்திக்கு அப்புறம் நானும், அனிருத்தும் சேர்ந்து பண்ணி இருக்கோம். 

    இன்று தவிர்க்க முடியாத இடத்தில் சினிமா உலகில் இருப்பவர் விஜய் சேதுபதி. 

    மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி ஏன் நடித்தார் என்று அவரிடமே கேட்டேன். அதற்கு அவர், 'உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்" என்று சொல்லி ஒட்டுமொத்தமாக என்னை ஆஃப் செய்துவிட்டார். அவர் பெயரில் மட்டும் எனக்கு இடம் கொடுக்கவில்லை. அவர் மனதிலும் எனக்கு இடம் கொடுத்துவிட்டார்.

    22:20 (IST)15 Mar 2020

    #NanbarAjith

    அஜித் குறித்து விஜய் பேசிய நண்பர் அஜித் எனும் வார்த்தை தற்போது தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. #NanbarAjith

    22:13 (IST)15 Mar 2020

    நண்பர் அஜித் போல் உடை அணிய வேண்டும் - விஜய்

    இசை வெளியீட்டு விழாவிற்கு நண்பர் அஜித் போல் உடை அணிய வேண்டும் என்று நினைத்தேன் என்று விஜய் தெரிவித்திருப்பது தான் இப்போது மோஸ்ட் ஹாட்டான தகவல்...

    22:09 (IST)15 Mar 2020

    விஜய்யை வரவேற்ற குட்டீஸ்

    விஜய் பேசுவதற்கு முன்பு, அவரது முந்தைய படங்களின் கெட்டப்பில் வந்து ஆடி குட்டீஸ் அசத்தினர். 

    திருப்பாச்சி, கில்லி, போக்கிரி, வேட்டைக்காரன்,  துப்பாக்கி உள்ளிட்ட படங்களின் பாடல்களுக்கு, விஜய்யின் அதே கெட்டப்புகளோடு வந்து சிறுவர்கள் நடனம் ஆடினார்கள்.

    21:57 (IST)15 Mar 2020

    மதம் தேவையில்லாதது - விஜய் சேதுபதி

    "சாமியை எந்த கூட்டத்துனாலயும் காப்பாத்த முடியாது. சாமி அவர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வார். மதத்தின் பெயரால் யார் உங்களை நெருங்கினாலும் தள்ளி வையுங்கள். மதம் தேவை இல்லாதது. அவர்கள் மதத்தைப் பற்றி உங்களிடம் உயர்வாக பேசினார்கள், உங்கள் மதத்தைப் பற்றி பேசாமல், அன்பை பற்றி மனிதத்தை பற்றி பேசுங்கள்" என்று பேசி அதகளம் செய்துவிட்டார்.

    21:54 (IST)15 Mar 2020

    யப்பா முடியலப்பா!!!

    விஜய் சேதுபதி பேசுகையில், "விஜய்க்கு close up ஷாட் வையுங்கள், அவர் வெட்கப்பட்டால் மிக அழகாக இருப்பார். இப்படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ சார் அதிக நேரம் பேசினார் என்று உங்களுக்கு தோன்றி இருக்கலாம். ஆனால், அவரிடம் அவ்வளவு அறிவு இருக்கிறது. அதனால் தான் அதிக நேரம் பேசினார்" என்று சொல்லி விஜய் சேதுபதி ஒரு அரைமணி நேரம் பேசினார்.

    யப்பா முடியலப்பா!!!

    21:37 (IST)15 Mar 2020

    விஜய் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பாடல்கள்

    சாண்டி மாஸ்டரின் அசத்தலான நடனம் அரங்கேறியது. ஆனால், ட்விஸ்ட் என்னன்னா பாடல்கள் முழுவதும் விஜய் சேதுபதிக்காக மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. 

    விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கிட்டத்தட்ட 12 நிமிடத்துக்கு விஜய் சேதுபதியின் பாடல்கள் மட்டுமே!!

    21:14 (IST)15 Mar 2020

    அரைமணி நேரம் பேசிய மாஸ்டர் தயாரிப்பாளர்

    படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசுகையில், "நான் இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கு முக்கிய காரணம் இயேசு சபை. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விஜய் அவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து வளர்த்து விட வேண்டும் என்ற உயரிய எண்ணம் படைத்தவர். இசையமைப்பாளர் அனிருத்துக்கு உடல் முழுவதும் டேலன்ட் மட்டுமே இருக்கிறது. 

    இன்று நிறைய பேர் நாம் சொல்வதை கேட்கவே மாட்டார்கள். ஆனால், விஜய் சேதுபதி நிறைய கேட்பார். He is a good listener. அவருக்கு இருக்கும் அறிவுக்கு காரணம், அவர் மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிப்பதால் தான். 

    இந்த படம் போன வேகமே தெரியவில்லை. இவ்வளவு சீக்கிரத்தில் இந்த படத்தை முடித்த ரகசியம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தெரியும். 

    தயாரிப்பாளர் பிரிட்டோ மட்டும் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பேசிவிட்டார் போங்கள்....

    21:06 (IST)15 Mar 2020

    மேடையில் முத்தங்கள்...

    முத்தங்கள் மேடையில் பரிமாறப்பட்டிருக்கின்றன... அது என்ன என்பது சஸ்பென்ஸ்

    21:02 (IST)15 Mar 2020

    வாழ்க்கை நதி மாதிரி - விஜய்

    வாழ்க்கை நதி மாதிரி. நம்மள வணங்குவாங்க, வரவேற்பாங்க , கல்லு எரிவாங்க.

    ஆனா கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும்

    - விஜய்

    20:53 (IST)15 Mar 2020

    என் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் கத்தி

    மாஸ்டர் ஆடியோ லான்ச் நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், "என் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் கத்தி. அதற்கு பிறகு மீண்டும் இப்போதும் இணைந்திருக்கிறோம். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர். முதலில் நாம் ஒருவரை ரசிகராக இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இசையமைக்க முடியும்" என்றார்.

    20:39 (IST)15 Mar 2020

    அரை மனசோட தான் இதுக்கு ஒத்துகிட்டேன் - விஜய்

    ரசிகர்கள் வர முடியாமல் வருத்தப்படுற அதே வருத்தம் எனக்கும் இருக்கு ! அதுக்கு காரணம் போன முறை வெளியே நடந்த விஷயங்கள் தான் ! அரை மனசோடு தான் ஒத்துகிட்டேன் - விஜய்

    20:06 (IST)15 Mar 2020

    ஷாந்தனு பாக்யராஜ் உருக்கம்

    விஜய்யின் தீவிர ரசிகரும், நடிகருமான ஷாந்தனு பாக்யராஜ் பேசுகையில், "எனது படங்களில் எத்தனையோ சரியாக போகவில்லை. அப்போதெல்லாம் கிடைக்காத மேடை இன்று கிடைத்திருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    19:06 (IST)15 Mar 2020

    குட்டிக் கதை பாடலுக்கு ஒரு குட்டிக் கதை பிளாஷ்பேக்

    "மாஸ்டர்" படத்தின் குட்டிக் கதை பாடல் எழுதிய அனுபவத்தை அருண்ராஜா காமராஜ் தெரிவித்தார். பாடல் எழுதுவதற்காக திருவையாறில் இருந்து சென்னை வந்த போது விபத்தை சந்தித்ததாகவும், அதன் பிறகே பாடலை எழுதியதாகவும் தெரிவித்துள்ளார். 

    18:42 (IST)15 Mar 2020

    Master Audio Launch Live

    சன் டிவியில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு தொடங்கியது. 

    18:24 (IST)15 Mar 2020

    மாளவிகா மோகனன் பேசுகையில்...

    நடிகை மாளவிகா மோகனன் பேசும் போது,

    17:55 (IST)15 Mar 2020

    பைக் இருக்குன்னு அடிக்கடி ரைடு போகாதீங்க

    ஒருத்தன் கீழ் எத்தனை படைகள் இருந்தாலும் அதனை வழிநடத்த ஒரு தளபதி வேணும். பைக் இருக்குன்னு அடிக்கடி ஈசிஆர்-ல ரைடு போகாதீங்க - விஜய் டிவி புகழ் தீனா

    17:21 (IST)15 Mar 2020

    விஜய் மீதான எனது அன்பு அந்த பாடல் - விக்னேஷ் சிவன்

    "இப்படத்தில் இரண்டு பாடல்களை நான் எழுதி இருக்கிறேன். ஒரு பாடல், விஜய் மீது ஹீரோயின் தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். ஆனால், உண்மையில் விஜய் மீதான என் அன்பை நான் வெளிக்கொணர்ந்த பாடல் அது" - விக்னேஷ் சிவன்

    16:55 (IST)15 Mar 2020

    எனக்கு ஒரு Hug தரணும்

    விழா மேடையில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சி மற்றும் ஷோபா சந்திரசேகர் அழைக்கப்பட்டனர். அப்போது ஷோபாவிடம் விஜய்யிடம் நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு ஒரு Hug தர வேண்டும் என்று விஜய் கேட்க, சற்றும் தாமதிக்காத விஜய் மேடை வந்து தாய் ஷோபாவை கட்டியணைத்துச் சென்றார்.

    16:41 (IST)15 Mar 2020

    Master Audio Launch - விஜய் என்ட்ரி வீடியோ

    மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், விஜய் என்ட்ரி கொடுக்கும் எக்ஸ்க்ளூஸிவ் வீடியோ,

    16:27 (IST)15 Mar 2020

    Master Audio Lunch: விழா மேடையில் விஜய்

    சன் டிவியில் லைவ் தான் 6.30 மணிக்கே தவிர, லைவ் நிகழ்ச்சி இப்போது தொடங்கிவிட்டது. நிகழ்ச்சியில் கலந்து விஜய்யின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள் நமது ஐஇ தமிழில்

    publive-image

    publive-image

    15:58 (IST)15 Mar 2020

    அது போன மாசம், இது இந்த மாசம்

    ரெண்டு பேரும் என்ன பேசிக்குறாங்க-னே புரியலயே!!

    15:54 (IST)15 Mar 2020

    Master Audio Launch Live Updates

    மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த டிராக் லிஸ்ட் வெளியாகி உள்ளது. மொத்தம் 8 பாடல்கள் உள்ள நிலையில் அதில் இரண்டு பாடல்களை யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடி உள்ளனர். இதில் யுவன் பாடிய பாடலை விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார்.

    15:37 (IST)15 Mar 2020

    Master Audio Launch Live Updates - மாஸ்டர் இசை வெளியீட்டு விழா லைவ்

    மாஸ்டர் இசை வெளியீட்டு விழா, இன்று சில மணி நேரங்களில் தொடங்கவுள்ள நிலையில், பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வந்த விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்த், விழா ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்தார். 

    publive-image

    publive-image

    Actor Vijay
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment