மாஸ்டர் படத்தின் காட்சிகள் லீக்… சோனி நிறுவன ஊழியர் மீது புகார் கொடுக்க முடிவு!

திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

master movie leak master scenes
master movie leak master scenes

master movie leak master scenes : விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் கொரோனா காரணமாக சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவரும் இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.

வாட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டுவருகின்றன. இது குறித்து ட்வீட் செய்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators.”மாஸ்டரை உங்களிடம் எடுத்துவர ஒன்றரை வருடங்கள் உழைத்திருக்கிறோம். எல்லாம் நீங்கள் திரையரங்குகளில் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். கசிந்த காட்சிகளை தயவுசெய்து பகிராதீர்கள். அனைவருக்கும் நன்றி. ஒரு நாள்தான், அதன் பின் மாஸ்டர் உங்கள் சொத்து!” என்று ட்வீட் செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இதேபோல, மாஸ்டர் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இன்டர்நடெ் காட்சிகளை பகிராமல் புகார் தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் தான், விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை இணையதளத்தில் லீக் செய்தது சோனி நிறுவன டிஜிட்டல் ஊழியர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படத்தின் காப்பியை இதுவரை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணையை தொடங்கினர்.
அதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக சோனி டிஜிட்டல் நிறுவனத்திடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

காட்சிகள் லீக் தொடர்பாக தனியார் நிறுவனம், ஊழியர் மீது புகாரளிக்க தயாரிப்பாளர் லலித்குமார் முடிவு செய்துள்ளார். இவரை, கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனம் படக்குழுவுக்கு உதவி செய்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Master movie leak master scenes master movie vijay master scenes leak master promo

Next Story
விஜே சித்ராவின் கடைசி போட்டோவை பகிர்ந்த தோழி: அந்த சிரித்த முகம் நினைவுகளில் உறைந்ததாக உருக்கம்vj chitra, vj chitra last show, vj chitra last selfie photo, vijay tv,விஜே சித்ரா, விஜே சித்ராவின் கடைசி நிகழ்ச்சி, விஜே சித்ரா கடைசி புகைப்படம், சரண்யா துரடி, actress sharanya thuradi, sharanya thuradi with vj chitra
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com