லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் (பிப்ரவரி 29) முழுமையாக முடிவுற்றதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
திரெளபதி விமர்சனம் : காதல் திருமணம் மீதான அச்சத்தை தூண்டும் கதை
இதன் மூலம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும், தொடர்ச்சியாகப் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், இசை வெளியீட்டு விழா, டீஸர் என விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கவுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை, விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுக்கும் புகைப்படத்துடன் அறிவித்துள்ளது படக்குழு.
சில நாட்களுக்கு முன்பு ‘மாஸ்டர்’ படப்பிடிப்புத் தளத்தில் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளது படக்குழு. அப்போது சதீஷ் குமாருக்கு அன்பாக முத்தம் ஒன்றைக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இதனைக் கவனித்த விஜய், தனக்கு முத்தம் கொடுக்குமாறு கிண்டலாகக் கேட்டுள்ளார். உடனே விஜய்யைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்வின்போது ஒட்டுமொத்தப் படக்குழுவினருமே கை தட்டி ஆரவாரம் செய்துள்ளனர். அந்தப் புகைப்படத்தைத் தான் இப்போது வெளியிட்டுள்ளது படக்குழு.
Tomorrow we sure give #MasterUpdate for U guys….????
Let’s meet Tomorrow pic.twitter.com/XHe44PBZWE
— XB Film Creators (@XBFilmCreater) February 29, 2020
இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனத்தின் XB creators பெயரில் வெளியான ட்விட்டர் பதிவில், “நாளை மாஸ்டர் படம் குறித்த அப்டேட் வெளியிடப்படும்” என்று அறிவிக்க, மாஸ்டர் அப்டேட் எனும் ஹேஷ் டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர், விஜய் ரசிகர்கள்.
ஆனால், காஞ்சிபுர மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் பொறுப்பாளரும், காஞ்சிபுர மாவட்ட இளைஞரணித் தலைவருமான DR.ECR.P.சரவணன் நம்மிடம் கூறுகையில், “தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நிறைய போலி ட்விட்டர் கணக்குகள் உலவுகின்றன. ஆகையால், ரசிகர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தின் தகவல்களை பின்பற்ற கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ட்வீட் போடப்பட்ட கணக்கு, போலி ட்விட்டர் கணக்கு என்று தெரியவந்துள்ளது.