scorecardresearch

சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் மீரா மிதுன்: அதையும் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

பதிலளிக்க அவர் வெளியிட்ட சில வீடியோக்கள் மூலமாகவும் சர்ச்சை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் மீரா மிதுன்: அதையும் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Meera mithun Video

Meera Mithun: பிக்பாஸ் 3-ல் பங்கேற்றவர்களில் சர்ச்சைகளின் மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பும், மிஸ் தென்னிந்தியா அழகிப் போட்டியில் கலந்துக் கொண்டு, திருமணமான விஷயத்தை மறைத்து, டைட்டில் வென்று விட்டதாகக் கூறி, அந்த டைட்டிலை  மீரா மிதுனிடமிருந்து திரும்பப்பெற்றது அழகிப் போட்டியை நடத்தியக் குழு.

இந்த விவகாரத்தின் போது, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாகக் கூறி, ஈவெண்ட் மேனேஜர் ஜோய் மைக்கேல் என்பவர் மீராவுக்கு எதிராக களத்தில் இறங்கினார்.

இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, 5 வாரங்கள் மட்டுமே உள்ளே இருந்தாலும், அவர் நிகழ்ச்சியில் இருக்கும் போதும், வெளியே வந்த பிறகும், அவரைப் பற்றி வெளியான வீடியோக்களும், அதற்கு பதிலளிக்க அவர் வெளியிட்ட சில வீடியோக்கள் மூலமாகவும் சர்ச்சை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

“பிக் பாஸ் வீட்டுக்குள் நானும் முகேனும் நெருக்கமாக இருப்பது போலான காட்சியையும், தனியாக பேசுவது போன்ற காட்சிகளையும் எடுத்து, முகேனின் பாடல்களை பின்னணியில் வைத்து எடிட் செய்து வெளியிடுங்கள்” என்றும் “அப்படி செய்தால் பேசியபடி பணம் தருவேன்” என்று மீரா மிதுன் கூறிய ஆடியோ வெளியாகி மீண்டும் சர்ச்சையானது.

தற்போது, அந்த ஆடியோவில் இருப்பது உண்மை இல்லை என்றும், இதை, தான் வெளியிடவில்லை என்றும் கூறி புதிய வீடியோவை மீரா வெளியிட்டுள்ளார். இந்த புதிய வீடியோவில், “நான் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதி நாளில் வீட்டுக்குள் சென்றேன். அப்போது ஷாக்‌ஷியும், அபிராமியும் வந்திருந்தார்கள். அவர்கள் எப்படி முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போதே என்னைப் பற்றி, நான் ஒரு ஃப்ராடு, ஏமாற்றுக்காரி என்று எல்லோரிடமும் தவறாக கூறினார்களோ, அதேபோல கடைசி நாளில் முகேன், சாண்டி என எல்லோரிடமும் இப்படி ஒரு ஆடியோவை நான் வெளியிட்டதாகக் கூறினார்கள்.

ஒருவேளை இந்த ஆடியோவை அவர்களே திட்டமிட்டு வெளியிட்டார்களோ? ஏனென்றால், அந்த ஆடியோ லீக் போன்ற விஷயம் எல்லாம், யார் வேண்டும்னாலும், யாரைப்போலவும் பேசலாம். என்னுடைய ஃபோனை ஏற்கெனவே என்னுடைய முன்னாள் மேனேஜர் திருடி வைத்திருக்கிறார். அதில் நான் பேசியிருப்பதை வைத்து எப்படி வேணும்னானும் எடிட் பண்ணி இந்த ஆடியோவைப் போட்டிருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

அடுத்ததாக வெளியிட்டுள்ள வீடியோவில், ”ஜோடி நம்பர் 1-ல் ஆசிப் என்பவர் என்னை தவறாக கையாண்டார். சங்கீதா மேம் பேசியதை வைத்து விஜய் டிவி ப்ரோமோ போட்டார்கள். உண்மை என்னவென்று, ஹாட் ஸ்டாரில் பாருங்கள். சேரன் சாரைப் பற்றி பேசுகையில், அவரை எல்லாரும் புனிதமானவராகப் பார்க்கிறார்கள். நான் பொண்ணுங்கள ரொம்ப மதிக்கிறவன், டி.ராஜேந்தர் படத்துல வர்ற மாதிரின்னு சொன்னாங்க. ஆனா அங்க இருக்க எல்லா பொண்ணுங்களையும் கட்டிப் புடிச்சாரு. அங்க இருக்க எல்லாரும், சேரன் பெரிய டைரக்டரு. அவர பகைச்சுக்கக் கூடாது. நமக்கு வாய்ப்பு தருவாருன்னு, அவருக்கு ஐஸ் வச்சு, ஜால்ரா தட்டுனாங்க” என்று கூறியுள்ளார்.

அடுத்த வீடியோவில், “நான் ஒரு நல்ல நிலைமைல உள்ள போனேன். 5-வது வாரம் சேரன் சாரால எல்லாமே மாறிடுச்சு. அவர் மேன் ஹேண்ட்லிங் செஞ்சாருன்னு சொல்லும் போது, அவர் தான் நல்ல டைரக்டராச்சே, அவரே நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணு, என்ன தப்பா காமிச்சிட்டாங்க. 2 பிள்ளைக்கு அப்பாவ இருக்க சேரன் என் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு, 2 பொண்ணுங்களுக்கு அப்பாவ இருக்க கமலும் எனக்கு சரியா எதுவும் பண்ணல” என்றுக் கூறியுள்ளார்.

அடுத்த வீடியோவில், “எனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்குன்னு சொன்னாரு, நான் சரியா டிரெஸ் பண்ணலன்னு சொன்னாரு, எங்கப்பா என்ன ஒழுங்க வளக்கலன்னு சொன்னாரு, இப்படி பிக் பாஸ் வீட்ல இருக்கும்போது, என்ன அவ்ளோ மெண்டல் டார்ச்சர் பண்ணிருக்காரு சேரன். அவர் பண்ணின விஷயத்துக்கு என் கிட்ட சாரி கூட கேக்கல. நான் எதோ கோவத்துல புடிச்சு தள்ளிட்டேன். என்ன மன்னிசிட்டு, நா தான் டிராமா பண்ணி உன்ன வெளில அனுப்பிட்டேன்னு சொல்லிருக்கலாம், ஆனா சேரன் எதுவுமே பண்ணல. தமிழ் நாட்ல மட்டும் தான் ஒரு பொண்ணு தனக்கொரு பிரச்னைன்னு வந்து நின்னா, அவ மேலயே பிரச்னைய திருப்பி விட்டுடுறீங்க” என்றுக் கூறியுள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், தங்களது கேள்விகளை கமெண்டின் மூலம் மீராவிடம் எழுப்பியுள்ளனர்.

”பிக்பாஸ் 3 ஃபைனலில் சேரனிடம் இந்த விஷயங்களை நேராக கேட்க உங்களுக்கு தைரியமில்லையா? நீங்கள் அவரை அணைக்கும் போது, இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்கலாமே” என்று இவர் கேட்டிருக்கிறார்.

”இந்த வீடியோவை எடுக்க உதவியவருக்கு நிச்சயம் விருது வழங்க வேண்டும்” என்பது இவரின் கருத்து.

”நீங்கள் கடந்து வந்த எல்லோரிடமும் எப்படி உங்களுக்கு பிரச்னை இருக்கிறது. இந்த உலகத்திற்கு, உங்களைப் பற்றியும், சேரனைப் பற்றியும் நன்றாக தெரியும்” என்றுக் கூறியுள்ளார்.

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக, வீடியோ வெளியிட்டு வரும் மீரா, மீண்டும் ட்ரோலுக்கு ஆளாவது சற்று வருந்தத் தக்கது தான்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Meera mithun video about cheran bigg boss tamil

Best of Express