Advertisment

அதர்வாவுக்கு ஜோடியான மேகா ஆகாஷ்

‘இவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து, அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் கண்ணன். இந்தப் படத்தில், அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
megha akash, atharvaa

கண்ணன் இயக்கும் புதிய படத்தில், அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

Advertisment

சென்னையைச் சேர்ந்த மேகா ஆகாஷ், லேடி ஆண்டாள் பள்ளியிலும், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்தவர். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் அறிமுகமாக வேண்டிய ‘ஒரு பக்க கதை’ படத்தில்தான் முதன்முதலாக கமிட்டானார் மேகா ஆகாஷ். ஆனால், அந்தப் படம் தயாராகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை.

அதற்குள் ‘லை’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்த மேகா ஆகாஷ், அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கி என்ன ராசியோ தெரியவில்லை... அந்தப் படமும் பாதியிலேயே நிற்கிறது. இந்நிலையில், அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் மேகா ஆகாஷ்.

‘இவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து, அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் கண்ணன். இந்தப் படத்தில், அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கதைப்படி விஸ்காம் படிக்கும் பெண்ணாக நடிக்கும் மேகா ஆகாஷ், ஸ்ரெயிட் பார்வேர்ட் கேரக்டராக நடிக்க இருக்கிறார்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்துக்கு இசையமைத்த ரதான், இந்தப் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஹைதராபாத்தில் தொடங்கும் படப்பிடிப்பு, தொடர்ந்து சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

Tamil Cinema Atharvaa Megha Akash Kannan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment