/tamil-ie/media/media_files/uploads/2018/02/mercury-release.jpg)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘மெர்குரி’ படம், ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். ‘இறைவி’ படத்துக்குப் பிறகு தனுஷ் கால்ஷீட் தருவதாகக் கூறியதால் காத்திருந்தார். ஆனால், ஒரு வருடமாகியும் தனுஷ் கால்ஷீட் தராததால், பொறுத்தது போதும் என பிரபுதேவாவை வைத்து ஒரு படத்தைத் தொடங்கினார். அந்தப் படம்தான் ‘மெர்குரி’.
‘மெர்குரி’, சைலண்ட் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, படத்தில் வசனங்களே இருக்காது. காட்சி மற்றும் பின்னணி இசை மூலமாகவே படத்தைப் புரிந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.
பிரபுதேவாவுடன் இணைந்து ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
‘மெர்குரி’ படம், ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Happy to announce the release date of #Mercury directed by @karthiksubbaraj..I had a superb time acting in this Silent Thriller..A unique experience for me in this unique film.. pic.twitter.com/eSKasmFWvJ
— Prabhudheva (@PDdancing) 15 February 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.