இந்த இரண்டு விஷயங்கள் நீங்கள் யார் என்பதை நிர்ணயிக்கும்: “மெர்சல்” விழாவில் விஜய்

துப்பாக்கின்னா தோட்டா இருக்கணும். கத்தின்னா ஷார்ப்பா இருக்கணும். தெறின்னா தெனாவட்டா இருக்கணும். மெர்சல்னா மிரட்டலா இருக்கணும்.

By: Updated: August 21, 2017, 12:27:32 PM

திரைப்படத்தில் ஹிட், ப்ளாப், பிளாக்பஸ்டர் என அனைத்துமே கொடுத்துவிட்டீர்கள் நண்பா. ஆனால், அவற்றை எல்லாம் விட எனது வாழ்வில் உங்களை சம்பாதித்ததே பெரிய விஷயமாக எண்ணுகிறேன் என நடிகர் விஜய் தெரிவித்தார்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பு, திரையுலகில் விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25-வது வருடம் ஆகியவவை இந்த விழாவில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும்போது: தயாரிப்பாளர் முரளிக்கும் அவருடைய மனைவி ஹேமாவிற்கும் வாழ்த்துகள். தேணாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக ‘மெர்சல்’ அமைந்திருப்பது படக்குழுவிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் தான் இவ்விழாவில் நாயகன். அவர் திரையுலகத்திற்கு வந்து 25-ஆண்டாகிறது. அவருடன் பணியாற்றியது என்பது ஸ்பெஷல். பாடல்களுக்கு மெட்டுப்போட்டு, ஆஸ்கர் விருது மூலம் உலகத்தையே மெர்சலாக்கியவர் இன்று ‘மெர்சல்’ படத்துக்கு மெட்டுப் போட்டுள்ளார். பாடல்களை நீங்கள் கேட்டுருப்பீர்கள் அது எப்படி இருந்தது என்பது என்பது நான்கூறி தெரியவேண்டியதில்லை. ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போது சுவாரஸ்யமாக இருந்தது.

‘தெறி’ படத்தை கொடுத்ததற்கு அட்லீக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அட்லீயின் நிறைய விஷயங்களையும், நம்பிக்கையையும் ரசித்ததுண்டு. பெரிய படம் என்ற போதிலும் 6 முதல் 7 மாதங்களில் சரியாக திட்டமிட்டு அதனை முடிந்தது மிகப் பெரிய விஷயம். அட்லீக்கும் அவருடைய குழுவினருக்கும் நன்றி.

சமந்தா, காஜல், நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, யோகி பாபு, ராஜேந்திரன் அண்ணா, சத்யன், அப்துல் என ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றி.

அட்வைஸ் செய்யும் அளவுகுக்கு நான் பெரிய ஆள் இல்லை

சில விஷயங்களை நான் தற்போது பேச வேண்டும் என நினைக்கிறேன். அட்வைஸ் செய்யும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. எனினும், எனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வெளியூர் பயணங்களின் போது நண்பர்களையும், ரசிகர்களையும் சந்தித்துப்பார்கள். அவர்களுடன் பேசுவதோடு, விவாதிக்கவும் செய்வேன். அப்போது, என்னைச் சுற்றியிருக்கும் எதிர்மறை விஷயங்களை எப்படி கையாள்கிறீர்கள் என்று கேட்பார்கள்.

வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துவிட்டு போய் கொண்டே இருங்கள். கத்தி கத்திப் பார்த்துவிட்டு அவர்களே சோர்ந்துவிடுவார்கள். எனது வாழ்க்கையில் இதுபோன்ற பல விஷயங்கள் நடந்துள்ளது. எனவே, தேவையில்லாத விஷயங்களுக்கு பதிலளித்துக் கொண்டு ஏன்?.

mersal, Actor vijay, Mersalaudio launch

இந்த உலகில் நம்மை எளிதில் வாழ விட்டுவிட மாட்டார்கள். நான்கு பக்கத்திலும் இருந்து நமக்கு சோதனைகள் வந்து கொண்டு தான் இருக்கும். அவவற்றை எல்லாம் தாண்டி தான் வந்தாக வேண்டும். அனைவருக்குமே நம்மை பிடித்துவிட்டால் வாழ்க்கை என்பது போரடித்து விடும். நம்மை பிடிக்காமல் கொஞ்ச பேராவது இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கை ரொம்ப ஜாலியாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

அழகும், ஆடம்பரமும் இருந்தால் ஆயிரம் பேர் கூட அன்பாக பழகுவார்கள். ஆனால், அன்பாக இருந்தால், பழகுகிற 10 பேர் கூட உண்மையாக இருப்பார்கள். நான் அன்பாக இருக்கிறேன் என்றே நினைக்கிறேன். அதனால் தான் என்னவோ, எனக்கு இவ்வளவு நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். திரைப்படத்தில் ஹிட், ப்ளாப், பிளாக்பஸ்டர் என அனைத்துமே கொடுத்துவிட்டீர்கள் நண்பா. ஆனால், அவற்றை எல்லாம் விட எனது வாழ்வில் உங்களை சம்பாதித்ததே பெரிய விஷயமாக எண்ணுகிறேன்.

வாழ்க்கையில், இரண்டு விஷயங்கள் நீங்கள் யார் என்பதை நிர்ணயிக்கும். ஒன்று, நீங்கள் நிர்கதியாக இருக்கையில் உங்களுக்குள் இருக்கும் மன உறுதி. மற்றொரு, உங்களிடம் சகலமும் இருக்கும் நிலையில், நீங்கள் நடந்து கொள்ளும் விதம். இவற்றை கடைப்பிடிப்பது எளிது தான்.

ஒரு குட்டிக் கதை

இதய அறுவை சிகிச்சை டாக்டர், ஒருவர் அவரது காரை சர்வீஸ் செய்வதற்காக, மெக்கானிக்கிடம் கொடுத்தார். அந்த மெக்கானிக் அந்த டாக்டரிடம் கூறுகிறான் ‘உங்களை மாதிரி தான் நானும் வால்வு பொருத்துகிறேன். அடைப்புகளை நீக்குகிறேன். ஆனால், எனக்குக் கிடைக்காத பேரும், புகழும், பணமும் உங்களுக்கு மட்டும் கிடைக்கிறதே’ என்று கேட்டான் அந்த மெக்கானிக்.

அதற்கு அந்த டாக்டர் பதிலளிக்கும்போது “நீ சொல்வது சரி தான். நீ சொல்வதை எல்லாம் வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போது செய்துபார், அப்போது புரியும்” என்றார்.

நான் பேசுவது பயனுள்ள வகையில் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள். அதனால், பிரச்சனை இல்லை. இவற்றையெல்லாம் எனது மகனிடம் கூறினார் அவன் கேட்க மாட்டான். ஆகவே, உங்களிடம் மட்டும் தான் இதனை பேச முடியும். இங்கு வந்திருக்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி.

துப்பாக்கின்னா தோட்டா இருக்கணும். கத்தின்னா ஷார்ப்பா இருக்கணும். தெறின்னா தெனாவட்டா இருக்கணும். மெர்சல்னா மிரட்டலா இருக்கணும்

இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Mersal audio launch actor vijay said in life we need some haters also for joly and happiness

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X