மீண்டும் மீண்டும் சாதனை படைக்கும் விஜய்யின் ‘மெர்சல்’

விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல், யூ டியூபில் 4 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல், யூ டியூபில் 4 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy 63 update, hbd thalapathy vijay,

விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல், யூ டியூபில் 4 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

Advertisment

விஜய் மூன்று வேடங்களில் நடித்த படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தை, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100வது படமான இது, 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்டது. நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் மூவரும் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

‘மெர்சல்’ படம், கடந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸானது. இந்தப் படத்தில், ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் இடம்பெற்றிருந்தன.  இதனால், ‘மெர்சல்’ படத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்கும்படி போராட்டங்களும் நடத்தினர். ‘மெர்சல்’ படத்துக்கு இந்த எதிர்ப்பு மூலம் இலவச விளம்பரம் கிடைத்தது. எனவே, படத்தின் வசூலும் அதிகமானது.

‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை, கவிஞர் விவேக் எழுதியிருந்தார். கைலாஷ் கெர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா ஆகியோர் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருந்தனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி இந்தப் பாடலின் லிரிக் வீடியோ யூ டியூபில் வெளியிடப்பட்டது. அது, இதுவரை 4 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

Advertisment
Advertisements

அத்துடன், ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலின் வீடியோ, கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி யூ டியூபில் வெளியிடப்பட்டது. 2 கோடியே 19 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை அந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. ‘மெர்சல்’ படத்தின் சாதனைப் பட்டியலில் இவையும் இணைந்துள்ளன.

Tamil Cinema Mersal Movie

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: