‘மெர்சல்’ படத்தைத் திரையிட மாட்டோம் : அடம்பிடிக்கும் தியேட்டர்கள்

‘மெர்சல்’ படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்கள் ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் தியேட்டர் நிர்வாகத்தினர்.

By: October 17, 2017, 3:05:34 PM

* பாலையா – நயன்தாரா நடிப்பில் ஒரு தெலுங்குப் படத்தை இயக்கிவரும் கே.எஸ்.ரவிகுமார், அடுத்ததாக அரவிந்த் சாமியை வைத்து தமிழில் படம் இயக்குகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக சுதீப், நித்யா மேனன் இயக்கத்தில் ‘முடிஞ்சா இவனைப்புடி’ படம் ரிலீஸானது.

* ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜூலி 2’ ஹிந்திப் படம், நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸாகிறது. இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் பயங்கர கவர்ச்சியாக நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. படப்பிடிப்பின்போது கால் முட்டியில் அடிபட்டு விட்டதாம். ஆனால், வலியைக் கூட பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

* கெளரவ் இயக்கியுள்ள ‘இப்படை வெல்லும்’ படத்தைத் தொடர்ந்து தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அதன்பிறகு தேனாண்டாள் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘7 கிணறு’ படத்தில் நடிக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்தப் படத்தில், ‘விக்ரம் வேதா’ புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் உதயநிதி ஜோடியாக இருக்கிறார். ‘இப்படை வெல்லும்’ படத்தைத் தொடர்ந்து வெளி தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் இரண்டாவது படம் இது.

* விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கியவர் மஜித். இவர், தற்போது பாலியல் தொழிலாளிகளைப் பற்றிய கதையை மையமாகக் கொண்டு ‘டார்ச் லைட்’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தில், சதா பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். அவருடன் சேர்ந்து ‘மெட்ராஸ்’ ரித்விகாவும் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்கிறார்.

* ஜி.எஸ்.டி. மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து, கடந்த 6ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவில்லை. ஆனால்,  சென்னையில் ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் தியேட்டர்கள் கடந்த 3ஆம் தேதி முதலே போராட்டம் நடத்தி வருகின்றன. ஏற்கெனவே ரிலீஸான படத்தைக் கூட இவர்கள் ஓட்டவில்லை. கேளிக்கை வரியில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நாளை முதல் புதுப்படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார்கள். ஆனால், நாங்கள் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்கள் ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் தியேட்டர் நிர்வாகத்தினர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Mersal movie not release in pvr and inox theaters

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X