/tamil-ie/media/media_files/uploads/2017/10/mersal-vijay.jpg)
‘மெர்சல்’ படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார் விஜய். அதில், மேஜிக் நிபுணராக நடித்த வெற்றி கேரக்டர், எல்லோராலும் பாராட்டப்பட்டது. ‘உலகிலேயே தலைசிறந்த மேஜிக் கலைஞர்’ என்று படத்தில் புகழப்பட்ட இந்த கேரக்டரில் நடித்த விஜய், உண்மையிலேயே மேஜிக் காட்சிகளில் அசத்தி இருப்பார்.
விஜய்க்கு மேஜிக் கற்றுக்கொடுத்த மேஜிக்மேன், ‘கற்றுக் கொடுப்பதை உடனடியாகப் புரிந்து கொண்டு ஆச்சர்யப்படுத்துகிறார். நான் சொல்லிக் கொடுத்ததைவிட சிறப்பாகவே விஜய் செய்கிறார்’ என்று வியந்து பாராட்டினார். மேஜிக் காட்சிகள் ஷூட்டிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஹேமா ருக்மணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#Mersal magician in the making, in Europe @Atlee_dir@MuraliRamasamy4@actorvijay@dop_gkvishnu@ThenandalFilms#TeamWork#TSL100pic.twitter.com/gCzXvC7MoC
— Hema Rukmani (@Hemarukmani1) October 28, 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.