Advertisment

ரியல் இல்ல மச்சி ரீல்: அதகள அமைச்சரான வனிதா விஜய்குமார்!

மோகனின் ஹரா திரைப்படத்தில் வனிதா விஜய்குமார் அமைச்சராக நடிக்கிறார்.

author-image
WebDesk
New Update
Mohan starrer Hara will hit the screens soon

மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ஹரா திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தில் சுரேஷ் மேனன் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில், அதிரடி அரசியல்வாதியாகவும் அதகளம் செய்யும் அமைச்சராகவும் இதுவரை ஏற்றிராத வித்தியாச வேடத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், 'ஹரா' திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

'ஹரா' படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் என ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே 'ஹரா' படத்தின் முக்கிய கருத்தாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment