/indian-express-tamil/media/media_files/2025/10/07/mohanlala-2025-10-07-21-24-31.jpg)
சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன்லால் இந்திய பிராந்திய இராணுவத்தில் (Territorial Army) இணைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அவருக்கு இந்திய இராணுவம் சார்பில் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் மோகன்லால். தி கம்ளீட் ஆக்ட்ர் என்று பெயர் பெற்றுள்ள அவர், மலையாளம் மட்டும் இல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்திய என பலமொழி படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ள நிலையில், சமீபத்தில் இவருக்கு இந்திய சினிமாத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தில் அவருக்கு கவுரவ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத் தலைவரிடம் இருந்து இந்த கெளரவத்தைப் பெற முடிந்த மகிழ்ச்சியை மோகன்லால் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார். இது ஒரு நல்ல சந்திப்பாக இருந்தது. இந்திய இராணுவத் தளபதியிடம் இருந்து மரியாதையைப் பெற்றேன். தாதா சாகேப் பால்கே விருதும் இந்தச் மரியாதை கிடைத்ததற்கான ஒரு காரணம். மேலும், நான் இராணுவத்தில் அங்கம் வகித்து 16 ஆண்டுகள் ஆகிறது. பொதுமக்களுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத பல விஷயங்களைச் செய்ய முடிந்தது.
Today, I had the honour of being called by the Chief of the Army Staff, General Upendra Dwivedi, PVSM, AVSM, to the Army Headquarters, where I was awarded the COAS Commendation Card in the presence of seven Army Commanders.
— Mohanlal (@Mohanlal) October 7, 2025
Receiving this recognition as an Honorary Lieutenant… pic.twitter.com/0E4SuJIxLg
இன்னும் நிறைய திட்டங்கள் உள்ளன. இதற்குச் சிறிது காலம் எடுக்கும். இளம் தலைமுறையினரை இராணுவத்திற்குக் கொண்டு வர முயற்சிப்பேன்," என்று மோகன்லால் கூறினார். இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தலைமையில் மோகன்லாலுக்கு இந்த சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இந்த அங்கீகாரம் கெளரவ லெப்டினன்ட் கர்னல் என்ற முறையில் கிடைத்திருப்பது மிகுந்த பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய தருணம் என்று மோகன்லால் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
மோகன்லால் 2009 ஆம் ஆண்டு பிராந்திய இராணுவத்தில் இணைந்தார். அவருக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. அவர் இந்திய இராணுவத்தின் 122வது காலாட்படை பட்டாலியன் (TA) மெட்ராஸ் பிரிவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெளியான எம்புரன், தொடரும் மற்றும் ஹிருதயப்பூர்வம் என தொடர்ந்து 3 வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மோகன்லால், அடுத்து த்ரிஷ்யம் 3 படத்தில் நடித்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.