mookuthi amman movie tamil nayanthara rj balaji : ஆர்.பாலாஜி – நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் படம் ஓடிடி -யில் வெளியாகியது. எல்.கே.ஜி படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் சரவணனுடன் சேர்ந்து இயக்கியும் உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. மேலும் படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளி பண்டிகையை இன்று நவம்பர் 14 ஆம் தேதி டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து இப்போது ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.அதில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் துணை நடிகர்கள் ஊர்வசி மற்றும் தடம் கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்
அதிரடியான வசனங்களுடன் நயன்தாராவின் ஆக்ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜியின் காமெடிக் காட்சிகள் இதை ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
mookuthi amman movie tamil nayanthara rj balaji : ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு தேர்வான நடராஜன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ’ஆர்ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை பார்ப்பதற்காக நானும் எனது குடும்பத்தினரும் எனது ஊர் மக்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்றும் குறிப்பாக ஆர்ஜே பாலாஜி அவர்களின் கிரிகெட் கமெண்டரியை எங்கள் ஊர் பொதுமக்கள் மிகவும் ரசித்தார்கள் என்றும் அதற்காகவே அந்த படத்தை பார்க்க அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் நடராஜன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மூக்குத்தி அம்மனும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் மிரட்டலுக்கு இலக்காகியிருக்கிறது.
Web Title:Mookuthi amman movie tamil nayanthara rj balaji mookuthi amman tamil movie tamilrockers
நயன்தாரா வரும் காட்சிகள் அனைத்திலும் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது என்றும் வைத்த கண் வாங்காமல் படத்தை பார்த்து ரசிப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
”குடும்பத்தோடு மூக்குத்தி அம்மன் படம் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்” தீபாவளிக்கு வாழ்த்துகள் கூறிய ஆர்.ஜே. பாலாஜி.
மூக்குத்தியம்மன் திரைப்படக் குழுவிற்கு படம் வெற்றி அடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
முதல் பாதி படம் முடிந்த நிலையில் இந்த படத்தில் காமெடி என்று கடுமையாக ரசிகர்களை வைத்து சோதனை செய்திருக்கிறாராம் ஆர்.ஜே. பாலாஜி
மூக்குத்தி அம்மன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட் ஷேர் செய்து அடடா, படத்தில் நயன்தாரா பெரும் அழகியாக இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.
இன்று மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க, டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ளஸ் ஓ.டி.டி. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை சற்று தாமதமாக வெளியிட்டனர். இதற்கு இடையில் இன்று படம் வெளியாகுமா ஆகாதா என்ற குழப்பத்தில் நெட்டிசன்கள் தங்கள் கவலைகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.