அஜித்குமாரின் ‘விவேகம்’ அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, இயக்குனர் சிவாவே அதிகம் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது. அந்தளவிற்கு அஜித்தை செம ஸ்டைலிஷாக இதில் காட்டியுள்ளாராம் சிவா. இப்படம் வெளியானவுடன் அஜித்தின் ரேஞ் இன்னும் ஒருபடி மேலே போவது நிச்சயம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் சிவா. அதேபோல், இப்படத்தில் வரும் சண்டைக் காட்சிகளும் பயங்கரமாக பேசப்படுமாம். ஒட்டுமொத்தமாக அஜித் மற்றும் சிவாவின் திரை வாழ்க்கையில் இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், விவேகம் படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி (வியாழன்) வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக பிரபல சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆகஸ்ட் 10-லிருந்து ஆகஸ்ட் 15 வரை தொடர் விடுமுறைகள் வருவதால், இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை புரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தமிழகத்தில் இதுவரை எந்தவொரு படத்திற்கும் கிடைக்காத அளவிற்கு தியேட்டர்கள், விவேகம் படத்திற்கு கிடைக்க உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.