கண்டெண்ட் ஸ்ட்ராங், வசூல் வீக்: சமீபத்திய படங்களின் பட்டியல்!
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு அதிரடி காட்சியும், துன்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணும், காப்பாற்றும் ஒரு ஹீரோவும், நம் இதயத்தை கசக்கி பிழியும் பாடலும் மட்டும் போதுமா?
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு அதிரடி காட்சியும், துன்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணும், காப்பாற்றும் ஒரு ஹீரோவும், நம் இதயத்தை கசக்கி பிழியும் பாடலும் மட்டும் போதுமா?
Most Underrated Movies in Recent Times: திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, சமூகத்தில் பல நிலைகளில் இருக்கும் மக்களின் வாழ்வியலை கண்முன் பிரதிபலிக்கும் ஓர் அற்புத ஊடகம்! ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு அதிரடி காட்சியும், துன்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணும், காப்பாற்றும் ஒரு ஹீரோவும், நம் இதயத்தை கசக்கி பிழியும் பாடலும் மட்டும் போதுமா? ஆனால் நாங்கள் அப்படி நினைக்கவில்லை. கண்டெண்ட் ஸ்ட்ராங்காக இருந்தும், வசூல் ரீதியாக வெற்றி பெறாத சமீபத்திய சில படங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
Advertisment
பேரன்பு - ராம்
இந்தப் படம் மிகவும் ஆழமானது. ஆனால் அதிகம் பேசப்படவில்லை. பேரன்பு தந்தை-மகள் உறவைச் சுற்றி எழுதப்பட்டது. பெருமூளை வாதத்தால் அவதிப்படும் தனது மகளை, இயற்கையுடன் இயல்பாக இணைக்க பாடுபடும் ஓர் அப்பாவின் இனிய போராட்டம். அப்பாவை நேசிக்கும் மகள்களுக்கும், மகளை நேசிக்கும் அப்பாக்களுக்கும் மிகவும் பிடித்தப் படம். ஆனால் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
டூ லெட் - செழியன்
Advertisment
Advertisements
சோகமான மகிழ்ச்சி படம் என டூலெட் படத்தை சொல்லலாம். எளிமையான கதைக்களத்தை ஓர் அழகான காட்சிக் கதையாக மாற்றியுள்ளனர். கதையை விட கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளை ஆழமாக பெற்றிருக்கும் படம் டூலெட். வீடு தேடுவதில் உள்ள சிரமங்களை கண்முன் காட்டியிருக்கும். படத்தின் கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையுடன் மிகவும் தொடர்புபடுத்தக்கூடியவை. வீடு தேடிச் சென்ற எவரும் அவர்களின் நிதி அல்லது பொருளாதார பின்னணியை நிச்சயமாக திரைப்படத்துடன் தொடர்புபடுத்த முடியும். இந்த பிரச்சினை எந்தளவுக்கு உலகளாவியது என்பதை இயக்குனர் மிகவும் நுட்பமாகக் காட்டியிருப்பார்.
உறியடி 2 - விஜயக்குமார்
பெரும்பாலும் ஒரு கட்டுக்கதை மற்றும் ஓரளவு உண்மை இப்படித்தான் பெரும்பாலும் இரண்டாம் பாக படங்கள் இருக்கும். ஆனால், உறியடி 2 இதை பின்பற்றவில்லை. ஏராளமான பிற இரண்டாம் பாக படங்களைப் போல இதுவும் முதல் படத்துடன் இணைக்கப்படவில்லை என்றாலும், இயக்குனர் சில கனெக்ஷன்களை தக்க வைத்துக் கொள்ள முயன்றார். இரண்டு படங்களும் ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றிப் பேசின.
உறியடி படம் போலவே இப்படத்திலும் ஆழமான, அழுத்தமான கருத்தை பதிவு செய்து இயக்கி நடித்திருந்தார் விஜய்குமார். தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்பு, அதற்கு பின்னால் இருக்கும் அரசியல், பொது மக்களை கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள் என அனைத்தையும் தோலுறித்து காட்டியிருந்தார்.
மெஹந்தி சர்க்கஸ் - ராஜு சரவணன்
இந்த படம் நடிகை ஸ்வேதா திரிபாதியின் கோலிவுட் அறிமுகத்தை கொண்டிருந்தது. கதைகளம் 90-களில் அமைக்கப்பட்டிருந்தது. சாதிதான் முக்கியம் என்று நினைக்கும் நாயகனின் அப்பா, காதலை ஏற்றுக்கொள்ளாத நாயகியின் தந்தை - இதற்கிடையில் காதல் என்ன ஆனது என்பதைப் புன்னகையும் கண்ணீருமாகச் சொல்லியிருந்தார் அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன். கொஞ்சம் 96 சாயல் இருந்தாலும், இசையால் இதயம் வருடியது.
வெள்ளைப்பூக்கள் - ராம்கோபால் கிருஷ்ணராஜு
விவேக் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் வீட்டிற்கு செல்கிறார். மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்ததால், தன் மகனிடம் விவேக் பேச மறுக்கிறார். பிறகு மகனிடம் பேசினாலும், மருமகளிடம் பேசுவதே இல்லை, அந்த சமயத்தில் விவேக் வீட்டிற்கு அருகே இருக்கும் பெண் திடீரென்று காணாமல் போகின்றார். அதை தொடர்ந்து ஒரு வாலிபரும் கடத்தப்பட, ஒரு கட்டத்தில் விவேக்கின் மகனும் கடத்தப்பட, அதன் பிறகு என்ன ஆனது என்பதை விவேக் கண்டுப்பிடிக்கும் விறுவிறுப்பான திரைக்கதை தான் இந்த வெள்ளைப்பூக்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”