/indian-express-tamil/media/media_files/2025/10/01/gvar-2025-10-01-14-17-45.jpg)
2-வது முறை தேசிய விருது... ஜி.வி.பிரகாஷுக்கு மாமா ரகுமான் கொடுத்த பரிசு; அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு!
கடந்த 2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான இவர், தொடர்ந்து பொல்லாதவன், ஆடுகளம், தெறி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் வலம் வருகிறார்.
’மதயானை கூட்டம்’ என்ற படத்தை தயாரித்த ஜி.வி.பிரகாஷ் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ’டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
தொடர்ந்து ’அடியே’, ’நாச்சியார்’, ‘பேச்சுலர்’, ‘கள்வன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது இசை நடிப்பு என பிஸியான இருந்து வருகிறார். பல படங்களை கைவசம் வைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இதுவரை 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ம் ஆண்டு சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் பிரிவதாக அறிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுவாக ஜி.வி.பிரகாஷின் படங்களின் சைந்தவின் பாடல் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இருவருக்கும் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில் திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற விரும்புவதாக, ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்த உடன் ரசிகர்கள் அனைவரும் அவர் நடிகை திவ்யா பாரதியை திருமணம் செய்து கொள்ளப்போவதால் விவாகரத்து பெறுகிறார் என்று கமெண்ட் செய்து வந்தனர்.
இந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. இதைத்தொடர்ந்து, இந்த செய்திக்கு பதிலடி கொடுத்த நடிகை திவ்ய பாரதி, நான் ஜி.வி.பிரகாஷை திருமணம் செய்து கொள்ளப்போவதாக பரவி வரும் செய்தி வதந்தி என்று கூறினார்.
இப்படி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்து வந்தாலும் திரைத்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவருக்கு ‘வாத்தி’ படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. இதற்கு முன்பு ’சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது பெற்றார்.
இரண்டு முறை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷுக்கு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
The best ever gift I recieved . @arrahman sir gifted me this beautiful white grand piano for receiving the National awards for the second time . Thanks a lot sir this means a lot . The piano used by the legend himself ❤️ . What more better gift can I ask for ❤️ pic.twitter.com/ieDIV0bqfS
— G.V.Prakash Kumar (@gvprakash) October 1, 2025
அதாவது, அவர் பயன்படுத்திய வெள்ளை நிற பியானோ ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ், “நான் இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றதற்காக ஏ.ஆர்.ரகுமான் இந்த பரிசை வழங்கினார்.
என் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு இது. இதைவிட பெரிய பரிசு நான் என்ன கேட்க முடியும்.” என்று உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.