பாட்டு, மெட்டு, பாடகி எல்லாம் ரெடி; நைட் ஒரு மணிக்கு டியூனை மாற்ற சொன்ன இயக்குனர்: 25 நிமிடத்தில் வந்த எம்.எஸ்.வி ஹிட் பாட்டு

இசையமைப்பாளர் எம்.எஸ்.வி 25 நிமிடத்தில் ஹிட் பாடலை ரெடி செய்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.வி 25 நிமிடத்தில் ஹிட் பாடலை ரெடி செய்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
msv 1

பாட்டு, மெட்டு, பாடகி எல்லாம் ரெடி; நைட் ஒரு மணிக்கு டியூனை மாற்ற சொன்ன இயக்குனர்: 25 நிமிடத்தில் வந்த எம்.எஸ்.வி ஹிட் பாட்டு

தமிழ் திரையுலகில் நீண்ட காலம் கோலோச்சியவர்களில் ஒருவர் எம்.எஸ்.விஸ்வநாதன். மெல்லிசை மன்னன் என அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களில் ஒரு துள்ளலும், துடிப்பும் நிச்சயம் இருக்கும்.

Advertisment

நாடகக் கம்பெனியில் தனது வாழ்க்கையை தொடங்கிய எம்.எஸ். விஸ்வநாதனை இசைமேதை எஸ்.எம் சுப்பையா அடையாளம் கண்டு பின் மெல்லிசை மன்னராக உயர்ந்தவர் எம்.எஸ்.வி. இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் இன்றும் நம் காதுகளில் தேனாய் வந்து பாயும்.

எம்.எஸ்.வி இசையமைப்பாளர் மட்டும் அல்ல சிறந்த பாடகரும் கூட. இவர் குரலில்  ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற பாடலை கண்மூடி கேட்கும் பொழுது அப்படியே கண்ணன் நம் முன் வந்து நிற்பதுபோல் இருக்கும். அப்படிப்பட்ட இசையும், குரலையும் கொண்டவர் எம்.எஸ்.வி

சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், அஜீத் என மூன்று தலைமுறைகளைத் தாண்டி பணிபுரிந்தவர் எம்.எஸ்.வி. ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன் என பாராபட்சமின்றி தனது இசையை அள்ளி வழங்கிய வள்ளல் அவர்.

Advertisment
Advertisements

’செந்தமிழ் தேன் மொழியாய்’, ‘ஆலய மணியின் ஓசை நான் கேட்டேன்’, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’, ‘அத்தான் என்னத்தான்’, ‘நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா நிலா’ போன்ற பாடல்கள் இன்று கேட்டாலும் தேனாய் இனிக்கும்.

காலத்தால் அழியாத பலப் பாடல்களை கொடுத்த எம்.எஸ்.வி. தனது இசையில் மட்டுமின்றி, இளையராஜா, தேவா, கங்கை அமரன், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரது இசையிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் விஸ்வநாதன் 25 நிமிடத்தில் ஒரு பாடலை உருவாக்கியது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ”சிவாஜி கணேசன் நடித்த ‘ஊட்டி வரை உறவு’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘தேடினேன்’ வந்தது பாடல் ரெக்கார்ட் செய்ய ரெடியாக இருந்தது.

பாடகி சுசீலா ரெடி, ஆர்க்கஸ்ட்ரா ரெடி இப்படி எல்லாம் ரெடியாக இருந்தது. டேக் எடுக்கப்போகும் நேரம் ஸ்ரீதர் சார் இரவு ஒரு மணிக்கு வந்து  விஸ்வநாதன் இந்த டியூன் நன்றாக இல்லை வேறு டியூன் போடு என்றார். அந்த பாடலில் கொஞ்டம் மார்டன் ஸ்டைல் வேண்டும் என்றார்.

 உடனே 25 நிமிடத்தில் அந்த பாடலின் மெட்டை மாற்றி புதிய டியூனை போட்டுவிட்டேன். இயக்குநருக்கு பாட்டு பிடிக்கவில்லை என்றால் நாளை அந்த பாட்டு ரசிகர்கள் மத்தியில் நிற்காது” என்றார்.

Cinema msv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: