தனுஷிக்கு வில்லனாகும் பாட்ஷா: எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் புதிய படம்
தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள வடசென்னையை மையமாக வைத்து உருவாகிவரும் படத்தில் இசையமைப்பாளர் தேவா அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் படம் ஒன்றை தானே இயக்கி நடிக்கவுள்ளார். தனுஷின் 50வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா முரளி, சந்தீப் கிருஷ்ணா என பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
Advertisment
நடிகர் சத்யராஜ் - இசையமைப்பாளர் தேவா
இந்தப் படத்தில் பாட்ஷா இசையமைப்பாளர் தேவாவை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன எனக் கூறப்படுகிறது. ஏனெனில் இசையமைப்பாளர் தேவா வட சென்னை பாஷையை மிகத் தெளிவாக பேசக் கூடியவர். இந்தப் பாஷையில் பல பாடல்களை எழுதி அவரே பாடியுள்ளார்.
தனுஷ் இயக்கும் படமும் வட சென்னையை மையப்படுத்தி கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தப் படத்தில் தேவா தனுஷூக்கு வில்லனாக நடிப்பார் எனக் கூறப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“