எம்.எஸ்.வி பாட்டை காப்பி அடித்த இளையராஜா; இந்த எம்.ஜி.ஆர் பாட்டு தான் இப்படி ஆச்சு; கங்கை அமரன் பேச்சு

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாட்டை தானும் இளையராஜாவும் காப்பி அடித்ததாக கங்கை அமரன் பேசியுள்ளார்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாட்டை தானும் இளையராஜாவும் காப்பி அடித்ததாக கங்கை அமரன் பேசியுள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
gangai

இளையராஜா மற்றும் கங்கை அமரன். இருவரும் சகோதரர்கள் என்பதும், இசையிலும், திரைத்துறையிலும் தனித்தனியே முத்திரை பதித்தவர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. கங்கை அமரன், இளையராஜாவின் தம்பியாக அறியப்பட்டாலும், தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவர் ஒரு சிறந்த பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். 

Advertisment

இளையராஜாவுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். 'கோழி கூவுது', 'கரகாட்டக்காரன்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கி இயக்குநராகவும் முத்திரை பதித்தார். இளையராஜாவுடன் பல இசை நிகழ்ச்சிகளிலும், ரெக்கார்டிங்குகளிலும் பங்கேற்று, இசை பற்றிய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். இதையடுத்து புகழ்பெற்ற இசையமைப்பாளராக வலம் வருகிறார் கங்கை அமரன்.

இந்நிலையில், எம்.எஸ்.வி பாட்டை காப்பி அடித்து தானும், இளையராஜாவும் பாடல்கள் அமைத்ததாக இசையமைப்பாளர் கங்கை அமரன் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “இளையராஜா, நான் எல்லோரும் எம்.எஸ்.விஸ்வநாதனை பின்தொடர்ந்து தான் வந்தோம். அவர்களுடைய பாட்டை கேட்டு தான் வளர்ந்தோம். அவர்களது பாட்டை நான், இளையராஜா எல்லாம் காப்பி அடித்தோம். இளையராஜா எந்த பாடை காப்பி அடித்தார் என்று அவர் தான் சொல்ல வேண்டும். நான் சொன்னால் அது இளையராஜாவிற்கு இழுக்காகிவிடும். 

எனக்கு ஒரு படம் வந்தது. அதாவது காதலி ஒரு பக்கம் இருக்கிறார் காதலன் ஒரு பக்கம் இருக்கிறார். இருவராலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. இந்த சிட்டிவேசனுக்கு ஏற்றார் போல் பாடல் வேண்டும் என்றார்கள். எம்.ஜி.ஆர் நடித்த ‘படகோட்டி’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ’ பாடல் மாதிரி வேண்டும் என்றார்கள். அதற்கு என்ன அந்த பாடலையே போட்டுருவோம் என்று சொல்லி கம்போஸ் செய்த பாடல் தான் ‘பொன் மான தேடி நானும் பூவோட வந்தேன்’ என்ற பாடல். இளையராஜா காப்பி அடித்த பாடலை கொஞ்சம் வேற மாதிரி போடுவார். நான் அப்படியே போட்டு வைத்தேன். 

Advertisment
Advertisements

இளையராஜாவுடன் அசிஸ்டெண்டாக கிட்டார் எல்லாம் வாசித்துக் கொண்டு இருந்ததும். இளையராஜா வேண்டாம் சொன்ன ட்யூன் எல்லாம் என்னிடம் இருக்கும் என்று நினைத்தார்கள். என்னை வைத்து இசையமைத்தால் இளையராஜா போடும் ட்யூன் மாதிரி கிடைத்துவிடும் என்று நினைத்தார்கள். நான் இளையராஜா மாதிரியா ட்யூன் போட்டேன். அது ஒரு டைப் அவருக்கு மட்டும் தான் வசப்படும்” என்றார்.

Gangai Amaran Ilaiyaraaja Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: