/indian-express-tamil/media/media_files/2025/09/29/gv-2025-09-29-13-00-51.jpg)
வெற்றிமாறனுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த ஐடியா... அசுரன் வெற்றிக்கு அடித்தளம் இதுதான்!
கடந்த 2007-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மீண்டும் தனுஷ் நடிப்பில் ’ஆடுகளம்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் தேசிய விருது வென்றது. தொடர்ந்து, ’வட சென்னை’, ’அசுரன்’, ‘விடுதலை’ போன்ற பல படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் முன்னணி இயக்குநராக இருக்கிறார்.
பொதுவாக தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி பெரும் வரவேற்பை பெற்ற கூட்டணியாகும். இவர்கள் இணைந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை 2’ படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படம் 2027-ஆம் ஆண்டு வெளியாகும் என்று தனுஷ் தெரிவித்திருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பொதுவாக வெற்றிமாறன் படத்தில் நடிகர்களின் தோற்றங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சமூகத்தின் கதையை தனுஷ் தனது நடிப்பால் மிக அருமையாக வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், ‘அசுரன்’ திரைப்படத்தில் இயக்குநர் வெற்றி மாறனுக்கு தான் கொடுத்த ஐடியா குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, "அசுரனில் கென் கருணாஸ் நடித்த முதல் காட்சி வந்தது.
அப்போது நான் வெற்றிமாறனிடம் சொன்னேன் அவர் கொஞ்சம் உடல் பருமனாக இருக்கிறார். பையன் போன்று தெரியவில்லை. அவருக்கு உடற்பயிற்சி அளித்து மீண்டும் காட்சியை எடுக்க முடியுமா என்று கேட்டேன்.
#GVPrakash Recent
— Movie Tamil (@_MovieTamil) September 29, 2025
- When I saw the initial footage of #Asuran, #KenKarunas looked a little overweight, so I told #Vetrimaaran to reshoot it.
- Because he was not convincing as #Dhanush’s son.
- Then Ken Karunas lost his weight and Vetrimaaran reshot it.pic.twitter.com/hriaMopgbF
அதன் பின்னர் கென் கருணாசின் உடல் எடையை குறைக்க வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார். அதுதான் நாம் இப்போது பார்க்கும் காட்சி. அந்த மாதிரியான கருத்துகளை எல்லாம் வெற்றி மாறன் எடுத்துக் கொள்வார்.
வட சென்னை காட்சியையும் எனக்கு காண்பித்தார். விடுதலை படத்தின் காட்சியையும் காண்பித்தார்” என்றார். பொதுவாக வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இடம்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.