/indian-express-tamil/media/media_files/2025/10/06/ilaiyaraaja-1-2025-10-06-19-36-53.jpg)
தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த இசையமைப்பாளராகவும், மிகச் சிறந்த பாடகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இசைஞானி இளையராஜா. 5 தேசிய விருதுகளை வென்ற மாமேதை அவர். இந்திய மொழிகள் பலவற்றுள் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.
தமிழில் இந்த 45 ஆண்டுகளில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வெளியாகி இருந்தாலும், இசை ஞானி இளையராஜா தான் அவர்களில் எப்பொழுதும் டாப் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் என்றால் அது மிகையல்ல. 1976-ம் ஆண்டு வெளியான "அன்னக்கிளி" திரைப்படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார் இளையராஜா. அன்று முதல் இன்று உள்ள இளைய தலைமுறையினர் வரை இளையராஜாவின் இசையில் நனையாதவர்கள் யாரும் இருந்ததில்லை.
இப்போதுள்ள இளம் இயக்குநர்களுடனும் இசையமைப்பாளர் இளையராஜா பணியாற்றி வருகிறார். இவருடைய குடும்பத்தை பொறுத்தவரை தம்பி கங்கை அமரன், மூத்த மகன் கார்த்திக் ராஜா, மகள் மறைந்த பாடகி பவதாரணி, இளைய மகன் யுவன் சங்கர் ராஜா என்று அனைவருமே இசைத்துறையில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைக்கனம் கொண்டவர் இளையராஜா என்று பலரும் கூறுகின்ற வேளையில், இவ்வளவு திறமையோடு உள்ள ஒரு மனிதன் கொஞ்சம் தலைகனத்தோடு இருந்தால் தான் என்ன தப்பு என்பது தான் அவருடைய ரசிகர்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு பாடலுக்கும் தன்னுடைய ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பை கொடுத்து இசையமைக்கும் திறன் கொண்டவர் இளையராஜா. இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா ‘அன்னக்கிளி’ திரைப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது,
“மாலை நேரத்தில் கடற்கரைக்கு நடை பயணம் செல்வேன். அப்போது எதிர்வீட்டில் ஆல் இந்தியா ரேடியோவில் இருந்து அடுத்தபடியாக ’அன்னக்கிளி’ படத்தில் இருந்து பாடல் என்று ஒலிப்பரப்பாகும்.
இதனை கேட்டதும் சிவகாமி ‘அன்னக்கிளி’ வருது என்று சொல்வேன். நான் என் வீட்டு தெருவை கடந்து செல்லும் பொழுது எல்லா வீட்டிலும் ஆல் இந்தியா ரோடியோ ஆன் பண்ணி வைத்திருப்பார்கள். அந்த பாடலை கேட்டுக் கொண்டே செல்வேன். அப்போது யோசிப்பேன் யார் இவர்களை எல்லாம் இந்த பாடலை ரசிக்க வைத்தது என்று. அதன்பின்னர் தான் புரிந்தது என் டியூன் அவர்களது டியூன். அவர்கள் என் டியூன் வழியாக அவர்களை கண்டுபிடிக்கிறார்கள் அவ்வளவு தான்.
ஒரு மனிதனாக சொல்கிறேன் இளையராஜா இறந்துவிட்டான். யாராவது தவறு செய்ததற்கு பெருமையாக உணர்வார்களா. இது தேவையில்லாத பிறப்பு. என்னை பற்றி எனக்கு தெரியும். மற்றவர்கள் என்னை பற்றி என் முன்பு புகழும் போது அதை நான் எப்படி தாங்குவேன். நான் என்ன கற்றுக்கொண்டேன் என்பது எனக்கு தெரியும்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.