/indian-express-tamil/media/media_files/2025/09/27/ilaiyaa-2025-09-27-12-34-11.jpg)
டைரக்டர் பேச்சை கேட்க மாட்டேன், இந்த மாதிரி பாட்டு எனக்கு வராது; உண்மை உடைத்த இளையராஜா!
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. தன் இசையால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 80-களில் இருந்து தற்போது உள்ள ரசிகர்கள் வரை அனைவரையும் தனது இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார்.
சிம்பொனி இசையமைத்து இசையில் சாதனை படைத்த இளையராஜா 1000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். ‘இசைஞானி’ என்ற பெயருக்கு ஏற்ப இசையில் தான்னால் என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இளையராஜா இசையில் ஒரு படம் பண்ணிவிடமாட்டோமா என்ற ஏக்கத்தில் பல இயக்குநர்கள் இன்றும் இளையராஜா இல்லத்தை வட்டமடித்து வருகின்றனர். ஒரு பாடலுக்கு 64 டியூன்கள் போடும் திறமை கொண்டவர் இளையராஜா என்று பலரும் அவரை புகழ்ந்துள்ளனர்.
மேலும் பிரபல பாடல்களுக்கு எல்லாம் பல டியூன்கள் போட்டு கொடுத்து பிடித்த டியூனை இயக்குநர்களிடம் எடுத்துகொள்ள சொல்வாராம். அதேபோன்று இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நாளில் ஆறு பாடல்களுக்கு டியூன் போட்டு முடித்துள்ளார்.
அந்த ஆறு பாடல்களை வைத்து இயக்குநர்கள் கதை எழுதி திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதுமட்டுமல்லாமல், இளையராஜா தான் இசையமைக்கும் பாடல்களை தனித்துவமாக இசையமைப்பார். எந்த பாடலின் மாதிரியாகவும் அந்த பாடல் இருக்காது.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா நான் இயக்குநர் பேச்சை கேட்கமாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “பாரதிராஜா நான் எல்லாம் ஒன்றாக நடந்தவர்கள் தான். ஆனால், அவர் எங்கயோ இருக்கிறார், நான் எங்கயோ இருக்கிறேன்.
ஒரு பாடல் இன்னொரு பாடல் மாதிரி இருந்தது என்றால் அது மாதிரி. ஒரு பாடல் ஒரு பாடலாக தான் இருக்க முடியும். இந்த மாதிரி ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குநர்கள் எல்லாம் கேட்பீர்கள். ஆனால், நான் தரமாட்டேன். இயக்குநர் பேச்சை கேட்பவன் இல்லை நான்.
இயக்குநர் கெளதம் மேனன் என்னை நன்றாக தெரிந்து கொண்டு நீங்கள் எங்கு வேண்டும் என்றாலும் இருந்து ரெக்கர்ட் செய்யலாம் என்றார். அதுதான் அவர் எனக்கும் இந்த இசைக்கும் கொடுக்கும் மரியாதை. அவர் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பது அந்த முதல் சந்திப்பிலேயே தெரிந்து விட்டது” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.