தாலாட்டு பாட்டை சூப்பர் ஹிட் காதல் பாட்டாக்கிய இளையராஜா... அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

இசையமைப்பாளர் இளையராஜா தனது தாயின் தாலாட்டு பாட்டை சூப்பர் ஹிட் காதல் பாட்டாக மாற்றியுள்ளார். இது குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா தனது தாயின் தாலாட்டு பாட்டை சூப்பர் ஹிட் காதல் பாட்டாக மாற்றியுள்ளார். இது குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
ilaiyaa

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் 80-களில் இருந்து தற்போது உள்ள தலைமுறையினர் வரை அனைவரும் ரசித்து மகிழும் படியான பாடல்களை எழுதி வருகிறார். இசைக்கு தன்னை முழுமையாக அர்பணித்த இளையராஜா ‘சிம்பொனி’ இசையும் இயற்றி யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார்.

Advertisment

இளையராஜாவுடன் ஒரு படம் பண்ணிவிட மாட்டோமா என்ற ஆசையில் பல இயக்குநர்கள் இன்றும் இளையராஜா வீட்டை சுற்றி வருகின்றனர். இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என பலரும் கூறுவார்கள். இசைக்காக தன்னையை அர்ப்பணித்தவருக்கு கொஞ்சம் தலைக்கனம் இருப்பதில் தப்பு இல்லையே என்பது ரசிகர்களின் கருத்து. பொதுவாக இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் டியூனையை மாற்றி வேறு படத்தில் பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தன் தாய் தனக்காக பாடிய தாலாட்டு பாடலை காதல் பாடலாக மாறியுள்ளார். அதாவது, கங்கை அமரன் இயக்கத்தில் கடந்த 1982-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கோழி கூவுது’ இந்த படத்தில் பிரபு, சுரேஷ், சில்க் சுமிதா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘பூவே இளைய பூவே’ பாடலில் தான் தன் தாய் பாடிய தாலாட்டு வரிகளை சேர்த்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இளையராஜா, ’பூவே இளைய பூவே பாடலில் பல்லவி மட்டும் தான் நான் கம்போஸ் செய்தேன்.  என் அம்மாவின் தாலாட்டு பாடலை தான் சரணமாக எழுதினேன். ‘மாமா அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே... யார் அடித்தார் சொல்லி அழு’ என்ற பாடலை தான் அந்த பாட்டிற்கு சரணமாக பயன்படுத்தினேன். 

Advertisment
Advertisements

இதுபோன்று தான் பல பாடல்களை எழுதியுள்ளேன். என் அம்மா இல்லை என்றால் நான் இல்லை. அவர் தான் என்னை சென்னைக்கு போக சொன்னார். இசையில் ஆர்வமாக இருக்கிறேன் என்று வீட்டில் இருந்த ரேடியோ பெட்டியை எடுத்து கொடுத்து, கையில் கொஞ்சம் காடு கொடுத்து நீ சென்னைக்கு போ என்று என்னை அனுப்பி வைத்தார். என் தாயின் ஆசிர்வாதத்தால் தான் நான் இப்போது இப்படி இருக்கிறேன்’ என்று கூறினார்.

Cinema Ilaiyaraaja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: