/tamil-ie/media/media_files/uploads/2017/11/nayanthara-2.jpg)
‘என்னுடைய தங்கமே...’ என ட்விட்டரில் நயன்தாரா பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சமீபத்தில், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை நியூயார்க்கில் இருவரும் கொண்டாடினர். அப்போது வெளியான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகின.
இன்று, நயன்தாராவுக்குப் பிறந்தநாள். இதை முன்னிட்டு, #HBDLadySuperStarNayanthara என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது. இந்நிலையில், தன்னுடைய காதலி நயன்தாராவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், தாங்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
“நான் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மைப் பெண்ணான உனக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். தைரியமாகவும், அழகாகவும் எப்போதும் இரு. நயன்தாரா என்றால் என்ன என்று அதிர்ச்சி தரும் கதைகளை உருவாக்கிக் கொண்டே இரு. உன்னை நினைத்து எப்போதுமே பெருமையாக இருக்கிறது. உன்மீது மீது அதிக மரியாதையும், காதலும் இருக்கிறது என்னுடைய தங்கமே...” என அந்தப் பதிவில் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.
,
Happy Birthday to a woman I really look upto ????????
— Vignesh Shivan (@VigneshShivN) November 18, 2017
Stay Bold????stay beautiful????
jus keep creating that stunning story of what is #Nayanthara ❤️????
Proud of u as always!! Loads of Love & respect to u my Thangameyyy????????????????????#HBDLadySuperStarNayantharapic.twitter.com/i052dzFuya
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.