Advertisment

சர்ச்சையை ஏற்படுத்திய ஜோதிகாவின் ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
naachiyaar jyothika

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Advertisment

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரஜினியின் ‘லிங்கா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பொதுவாக, ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்வார் பாலா. ஆனால், இந்தப் படத்தைத் தொடங்கிய சில மாதங்களிலேயே முடித்துவிட்டார் என்பது ஆச்சரியம்.

ஏற்கெனவே ரிலீஸான டீஸரின் இறுதியில், ஜோதிகா கெட்டவார்த்தை பேசுவார். அதற்கு பல இடங்களி எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, டிரெய்லரில் அதுமாதிரியான வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், வன்முறைக் காட்சிகள் நிறைய இருப்பதால், இந்தப் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள்.

பிப்ரவரி 9ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. சாய் பல்லவி நடித்துள்ள ‘கரு’, ஜீவா - நிக்கி கல்ரானி நடித்துள்ள ‘கீ’, இயக்குநர்கள் ராம் மற்றும் மிஷ்கின் நடித்துள்ள ‘சவரக்கத்தி’ ஆகிய படங்களும் அதே தேதியில் ரிலீஸாக இருக்கின்றன.

Tamil Cinema Bala Jyothika Gv Prakash
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment