நடிகை ஜோதிகா நடித்து, இயக்குநர் பாலா இயக்கும் ‘நாச்சியார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை, நடிகர் சூர்யா இன்று வெளியிட்டார்.
Advertisment
மோஷன் போஸ்டரில், நடிகை ஜோதிகா அத்திரைப்படத்தில் கோபமாக இருப்பதுபோலவே தோன்றினார். இந்த திரைப்படம் முறையாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ஜோதிகா கோபமாக இருப்பதுபோன்றே போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்த திரைப்படத்தில் நிச்சயமா ஸ்டிராங்கான ஜோதிகாவை நாம் எதிர்பார்க்கலாம்.
நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் இயக்குநர் பாலா. நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் நடிகர் சூர்யாவின் மிக முக்கியமான திரைப்படங்களாக அமைந்தன. அதனால், நாச்சியார் திரைப்படத்தை இயக்குவது ஜோதிகாவிற்கும், சூர்யாவிற்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மோஷன் போஸ்டரை வெளியிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில், “நந்தாவிலிருந்து நாச்சியார் வரை பாலா அண்ணாவுடன் பயணிப்பது மிகப்பெரும் ஆசீர்வாதம்”, என நடிகர் சூர்யா பதிவிட்டார்.
Advertisment
Advertisements
இந்த திரைப்படத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது, ஜோதிகா காவல் துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ் கிரிமினலாகவும் நடிக்கின்றனர். ஆனால், பட போஸ்டர்களை பார்க்கும்போது இருவரும் ஒரே டீம் போலவும் தெரிகிறது.
நடிகர் பாலாவும், இசையமைப்பாளர் இளையராஜாவும் இந்த திரைப்படம் மூலமாக 5-வது முறையாக இணைந்து பணியாற்றி உள்ளனர். பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி’ ஸ்டுடியோஸ் மற்றும் EON ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளன.
ஜோதிகா நடிப்பில் தயாராகியுள்ள மற்றொரு திரைப்படமான ‘மகளிர் மட்டும்’ இம்மாதம் 11-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், அப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.