Advertisment

நடிகர் சங்க தேர்தல்: ’பாண்டவர் அணி 2.0’-வின் முழு பட்டியல் இங்கே!

துணைத் தலைவர் பொன்வண்ணன் இம்முறை போட்டியிடவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pandavar ani 2.0 announced, Vishal, Nasser, Karthi

Nadigar Sangam Elections: நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதியன்று, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் நடக்கிறது.

Advertisment

பல வருடங்களாக குறிப்பிட்ட சிலரே நடிகர் சங்க பொறுப்புகளில் இருந்து வருவதாகக் கூறி, விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது அடுத்த தேர்தலும் வந்து விட்டது.

துணைத் தலைவர் பொன்வண்ணன் இம்முறை போட்டியிடவில்லை. அவருக்கு பதில் பூச்சி முருகன் போட்டியிடுகிறார். மற்றபடி நாசர் (தலைவர்), விஷால் (பொதுச் செயலாளர்), கார்த்தி (பொருளாளர்), கருணாஸ் (துணைத் தலைவர்) ஆகியோர் மீண்டும் அதே பதவிகளுக்குப் போட்டியிடுகிறார்கள்.

Pandavan Ani Candidates Complete List

செயற்குழு உறுப்பினர்களுக்கு குட்டி பத்மினி, கோவை சரளா, நந்தா, பிரசன்னா, சிம்ரன், பசுபதி, ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னப்பா, அஜய் ரத்னம், பிரேம், பிரகாஷ், சோனியா போஸ், தளபதி தினேஷ், ஜூனியர் பாலைய்யா, ஹேமா, குஷ்பு, லதா, நிதின் சத்யா, பருத்திவீரன் சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி காரைக்குடி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

 

Tamil Cinema Vishal Karthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment