அந்த ஷோ இயக்குனர்கள் ஏமாற்றுவதில் வல்லுநர்கள்: பிக்பாஸை சொல்கிறாரா நமீதா?

தற்போது இன்ஸ்டாகிராமில் நமீதா பதிவு செய்திருக்கும் ஒரு போஸ்ட், பிக் பாஸ் பற்றியதா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

பிக்பாஸில் இருந்து இதுவரை வெளியேறிய எந்த ஒரு போட்டியாளரும், பிக்பாஸ் குறித்து பேச மறுக்கின்றனர். காரணம், இந்த முதல் சீசன் பிக்பாஸ் முடியும் வரை, இடையில் வெளியேறும் போட்டியாளர்கள், பிக்பாஸ் குறித்து யாருக்கும் பேட்டி அளிக்கக்கூடாது என ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்பட்டிருப்பதே ஆகும்.

இந்த நிலையில், கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட நடிகை நமீதா, மீடியாவிடம் பேச தொடர்ந்து மறுத்து வந்தார். ஆனால், தற்போது இன்ஸ்டாகிராமில் நமீதா பதிவு செய்திருக்கும் ஒரு போஸ்ட், பிக் பாஸ் பற்றியதா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

பாதி உண்மை (The Half Truth) என தலைப்பிட்டு அந்த கவிதையை அவர் எழுதியுள்ளார். அதில்,

“நீ காலையில் எழுவாய்…சிரிப்புடன், நானும் அதைத் தான் சிறப்பாக செய்ய நினைத்தேன். ஆனால் உன்னை ஒரு பெண் தூண்டிவிட்டு மன நிம்மதியை உடைப்பாள், தூள் தூளாக உடைந்த பீஸ்களை எடுத்து அந்த நாளை தொடங்கலாம் என்று போவாய். அதே பெண் மீண்டும் உன்னை சீண்டுவாள்.

ஒரு கட்டத்தில் நீ பொறுமை இழப்பாய், ஏனென்றால் உனக்கும் தன்மானம் இருக்கும் தானே. அது, அந்த விஷயத்தில் இருந்து உன்னை பாதுகாக்கும். அங்கு இருக்கிற விரல்கள் எல்லாம் உன்னை நோக்கியே இருக்கும். அவர்கள் பேசுவது உனக்குக் கேட்கும்.

நீங்கள் என்னை ஜட்ஜ் பண்ணியது எனக்காகக் காட்டப்பட்ட வேடத்தைதான். அந்த ஷோ இயக்குநர்கள் ஏமாற்றுவதில் வல்லுநர்கள். ஒரு முழு நாளை ஒரு மணி நேரமாகச் சுருக்க முடியும். ஆனால், அப்படிச் சுருக்கும்போது அதன் உண்மைகள் மாறும். இது பாதி உண்மை தான். நீங்கள் அனைவரும் பார்த்த அந்தப் பாதியும் தப்பான பாதிதான்.

நீங்கள் அனைவரும் அந்த ஷோவை பார்த்தீர்கள். ஆனால், உண்மையை நீங்கள் கவனிக்கவில்லை” என்று கூறி தனது கையெழுத்தை இட்டுள்ளார் நமீதா.
ஆனால், ஒரு இடத்தில் கூட நமீதா ‘பிக்பாஸ்’ பற்றி குறிப்பிடவேயில்லை. இருப்பினும், பிக்பாஸைப் பற்றித் தான் அவர் கூறியிருக்கிறார் என்றே தெரிகிறது.

×Close
×Close