41 நாட்களில் திட்டமிட்டபடி ஷூட்டிங்கை முடித்த கார்த்திக் நரேன்

மொத்தம் 41 நாட்கள் படப்பிடிப்பைத் திட்டமிட்டு, அதன்படியே 41 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.

‘நரகாசூரன்’ படத்தை, திட்டமிட்டபடி 41 நாட்களில் எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

‘துருவங்கள் 16’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, இந்திரஜித், சந்தீப் கிஷண், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். ரான் யேதான் யோகன் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘துருவங்கள் 16’ ஷூட்டிங் நடைபெற்ற ஊட்டியில்தான் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுள்ளது. நேற்றுடன் இந்தப் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மொத்தம் 41 நாட்கள் படப்பிடிப்பைத் திட்டமிட்டு, அதன்படியே 41 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.

கார்த்திக் நரேன், இந்தப் படத்தின் தயாரிப்பாளராக இருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இயக்குநர் கெளதம் மேனனுன், கார்த்திக் நரேனுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ‘இப்படி எல்லா இயக்குநர்களும் திட்டமிட்டபடி ஷூட்டிங்கை முடித்துவிட்டால், எங்களுக்குப் பெரிய அளவில் கஷ்டம் இருக்காது’ என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். பிப்ரவரி மாதம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

×Close
×Close