சிவகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’. விஜய் டிவி புகழ் கவின் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்துள்ளார். நடிகர், பாடலாசிரியர், பாடகர் அருண்ராஜ் காமராஜ் மற்றும் விஜய் டிவி சீரியலில் நடித்த ராஜு ஜெயமோகன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, தரண் குமார் இசையமைத்துள்ளார்.
