New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/04/Nayanthara.jpg)
கடந்த 10-ம் தேதி தர்பாரின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.
Nayanthara joins Darbar shooting : பொங்கலுக்கு வெளியான ’பேட்ட’ திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணி புரிகிறார்.
கடந்த 10-ம் தேதி தர்பாரின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார். இடையில் மக்களவைத் தேர்தலுக்காக சென்னை வந்து போனார்.
#Nayanthara joins the sets of thalaivar's #Darbar today ????????@ARMurugadoss @santoshsivan @anirudhofficial #IdhuThalaivarinDarbar pic.twitter.com/tA7vhVlKBo
— Lyca Productions (@LycaProductions) April 23, 2019
இந்நிலையில் இன்று நடிகை நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதாக தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ’லைகா’ ட்விட்டரில் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.