நயன்தாரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் : மார்ச் 5ஆம் தேதி ரிலீஸ்!

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கோலமாவு கோகிலா’. பெண்ணை மையப்படுத்திய இந்தக் கதையில், நயன் தான் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, ‘விஜய் டிவி’ ஜாக்குலின் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘கோலமாவு கோகிலா’ படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சிம்பு, தீக்‌ஷா சேத், ஹன்சிகா மோத்வானி நடிப்பில், பாதியில் நின்றுபோன ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்கியவர் இவர். அதன்பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, நிர்மல் எடிட் செய்கிறார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வருகிற மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரு பாடலை 8ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close