நயன்தாரா பங்கேற்ற ‘வேலைக்காரன்’ படத்தின் ஃபேர்வெல் டே கொண்டாட்டம்!

ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்ததை அடுத்து, இன்று ஃபேர்வெல் டே கொண்டாடியுள்ளது படக்குழு.

சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துள்ள ‘வேலைக்காரன்’ படக்குழுவினர், இன்று ஃபேர்வெல் டே கொண்டாடியுள்ளனர்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. மலையாள முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகிணி, ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, 24 ஏ.எம். ஸ்டுடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இறைவா’ பாடலின் படப்பிடிப்பு, சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்றது. சென்னையிலும் சில நாட்கள் இறுதிக்கட்ட காட்சிகளைப் படமாக்கினர். ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்ததை அடுத்து, இன்று ஃபேர்வெல் டே கொண்டாடியுள்ளது படக்குழு.

சென்னை, சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் இயக்குநர் மோகன் ராஜா, எடிட்டர் மோகன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், ரோபோ சங்கர், நடிகை நயன்தாரா, பாடலாசிரியர் விவேகா, டான்ஸ் மாஸ்டர் ஷோபி, தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, கலை இயக்குநர் முத்துராஜ் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கேக் வெட்டினார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nayanthara participated velaikkaran movie team farewell day celebration

Next Story
‘ஹேப்பி பர்த்டே’ நயன்தாரா : லேடி சூப்பர் ஸ்டாரின் லவ்லி மொமண்ட்ஸ்…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com