/tamil-ie/media/media_files/uploads/2018/02/ajith-nayanthara-viswasam.jpg)
சிவா இயக்கும் ‘விசுவாசம்’ படத்தின் மூலம், நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா.
சிவா - அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விசுவாசம்’. ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. வெற்றி ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். அனிருத், அஜித்துக்காக இசையமைக்கும் மூன்றாவது படம் இது.
‘விசுவாசம்’ படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ்.
We are proud to have #Nayanthara on board as the heroine for #Viswasam@directorsiva#Ajithkumar@SureshChandraa@DoneChannel1
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) 5 February 2018
‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ படங்களைத் தொடர்ந்து அஜித்துடன் நயன்தாரா நடிக்கும் நான்காவது படம் இது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கிறார் நயன்தாரா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.