Advertisment

சந்தோஷத்தில் நயன்தாரா... அந்த குட் நியூஸ் என்ன தெரியுமா?

டோரா பேக்கை மாட்டிக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து செல்லும் காட்சிகள் அவரின் ரசிகர்களை ரசிக்க வைத்திருந்தது.

author-image
WebDesk
Jun 29, 2018 11:40 IST
New Update
சந்தோஷத்தில் நயன்தாரா... அந்த குட் நியூஸ் என்ன தெரியுமா?

நடிகை நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழால் நயன் செம்ம ஹாப்பியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

Advertisment

கோலிவுட்டில் உச்சபட்ச நடிகர்களுக்கு இருக்கும் ஃபேன்ஸ் பட்டாளம், மாஸ் எண்ட்ரீ, பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எல்லாமே ஒரு பெண் நடிகைக்கும் இருக்கிறது என்றால் அது நடிகை நயன்தாராவிற்கு மட்டும் தான். காதல், கல்யாணம் என்று நயன் தாரா எவ்வளவு சர்ச்சையில் சிக்கினாலும் அவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈடுப்பாடு மேலும் மேலும் கூடிக் கொண்டே செல்கிறதே தவிர,ஒருபோதும் குறையவில்லை.

உச்சத்தில் இருக்கும் போதே சினிமாவை விட்டு விலகிய நயன், ’ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரீ கொடுத்தது ரசிகர்களை தலைக்கால் புரியாமல் ஆட வைத்தது. ராஜா ராணி படத்திற்கு பிறகு அவர் நடித்த அத்தனை படங்களும் மாபெரும் வெற்றி. குறிப்பாக நானும் ரவுடி தான், அறம் போன்ற படங்கள் நயனை ரசிப்பதை தாண்டி மதிக்கவும் வைத்தது.

ஒருபக்கம் விக்னேஷ் சிவனுடன் காதல், அமெரிக்கா ட்ரிப் என்று நயன் பிஸியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நேர்த்தியான படங்களை தேர்வு செய்து நடிப்பதில் நயன் தெளிவாக செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் அவர் தேர்வு செய்திருக்கும் படம் தான் ‘கோலமாவு கோகிலா’. நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து கல்யாண வயசு பாடல் வெளியாகி யுடூயுப்பில் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கலக்கி இருந்தது. பாடலில் நயன் தாரா பாவடை சட்டையில், டோரா பேக்கை மாட்டிக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து செல்லும் காட்சிகள் அவரின் ரசிகர்களை ரசிக்க வைத்திருந்தது. படம் குறித்த எதிர்ப்பார்ப்பும் பெருமளவில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் கோலமாவு கோகிலா படம் தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த படத்தைப் பார்த்த தணிக்கை குழு டத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த செய்தியைக் கேட்ட நயன்தாரா செம்ம ஹாப்பில் இருக்கிறாராம். படத்தை எவ்வளவு சீக்கிரத்தில் ரீலிஸ் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் தனிப்பட்ட முறையில் வேண்டுக்கோளும் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Nayanthara #Kolamaavu Kokila
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment