Advertisment

நயன்தாராவின் தியேட்டர் விசிட் : அரசியல்வாதிகள் ஸ்டைலில் கும்பிடு, பரவசத்தில் ரசிகர்கள்

நடிகை நயன்தாரா சென்னையில் ‘அறம்’ திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்களுக்கு விசிட் அடித்தார். அரசியல்வாதிகள் ஸ்டைலில் அவர் போட்ட கும்பிடுதான் ஹைலைட்!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

நடிகை நயன்தாரா சென்னையில் ‘அறம்’ திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்களுக்கு விசிட் அடித்தார். அரசியல்வாதிகள் ஸ்டைலில் அவர் போட்ட கும்பிடுதான் ஹைலைட்!

Advertisment

nayanthara theatre visit, nayanthara, aramm, tamil cinema, director gopi nainar நயன்தாரா தியேட்டர் விசிட்..

நடிகை நயன்தாரா நடிப்பில் ‘அறம்’ என்ற படம் வெளியாகியிருக்கிறது. ராஜேஷ் தயாரிப்பில் இயக்குனர் கோபி நயினார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கதாநாயகியாகவும், கதையின் நாயகியாகவும் நயன்தாராவின் நடிப்பு இந்தப் படத்தில் அதிகம் பேசப்படுகிறது.

nayanthara, aramm, tamil cinema, nayanthara theatre visit, director gopi nainar நயன்தாராவின் உற்சாக கையசைப்பு

இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, நயன்தாராவை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நயன்தாரா, ‘எல்லாப் பக்கமும் அற்புதமான ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. மகிழ்ச்சியில் இருக்கும் ரசிகர்களுக்கு எனது அன்பு. அறம் டீமின் மிகப் பெரிய முயற்சி இது’ என கூறியிருக்கிறார்.

நயன்தாராவின் ட்வீட்..

இதற்கிடையே ‘அறம்’ குழுவினருடன் சென்னையில் அந்தப் படம் ஓடும் தியேட்டர்களுக்கு நேற்று திடீர் விசிட் அடித்தார் நயன்தாரா. முதலில் காசி தியேட்டருக்கு சென்றவர், அங்கு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். ரசிகர்கள் ஆரவாரமாக ‘ஓ..!’வென குரல் எழுப்பினர். அங்கு ரசிகர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து படம் பார்த்தார்.

தொடர்ந்து உதயம் சினிமாஸ், கமலா சினிமாஸ் தியேட்டர்களுக்கும் விசிட் அடித்தார். அங்கும் ஆரவார ரசிகர்களைப் பார்த்ததும் நயன்தாராவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி! அவர்களுக்கு கையசைத்தும், அரசியல்வாதிகள் ஸ்டைலில் கும்பிடு போட்டும் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் நயன்தாரா.

நயன்தாராவின் தியேட்டர் விசிட்தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாக்! ஓரிரு இடங்களில் ரசிகர்களின் முற்றுகையில் இருந்து நயனை மீட்பதற்குள் படக் குழுவினருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. போகிற போக்கைப் பார்த்தால் கமலஹாசனையும், ரஜினி காந்தையும் முந்திவிடுவாரோ... அரசியலில்?!

 

Gopi Nainar Nayanthara Tamil Cinema Aramm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment