Advertisment

Nayanthara Wedding Exclusive: விக்னேஷ் சிவன் உறவினர்களுக்கு அழைப்பு இல்லை; லால்குடி பங்காளிகள் குமுறல்!

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்

author-image
WebDesk
New Update
Nayanthara Wedding Exclusive: விக்னேஷ் சிவன் உறவினர்களுக்கு அழைப்பு இல்லை; லால்குடி பங்காளிகள் குமுறல்!

Actress Nayantara is getting married to director Vignesh Sivan tomorrow

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

Advertisment



 ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ''தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்'' எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார். நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் என்று பலமுறை தகவல் வெளியானது. இது குறித்து விக்னேஷ் சிவனிடமே கேட்டதற்கு, எனக்கும், நயனுக்கும் திருமணம் நடக்கும்போது நாங்களே அறிவிப்பு வெளியிடுவோம் என்றார். நயன்தாராவை திருமண கோலத்தில் பார்க்கத் தான் ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்பான இயக்குநரே, தலைவியை எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நயன்தாரா ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் அடிக்கடி கேட்டு வந்தார்கள்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். ஆனால் இப்போது இவர்களின் திருமணம் ஜூன் 9-ம் தேதி அதாவது நாளை மகாபலிபுரத்தில் நடக்கவிருக்கிறது.

publive-image

 திருமணத்திற்கு கிட்டத்தட்ட 200 பேர் வருவார்கள், அதுவும் பலரும் விவிஐபி மட்டுமே என்பதால் பாதுகாப்பு கொடுப்பது கஷ்டம். ஆகையால் தான் திருப்பதியில் திருமணம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்பதால் மஹாபலிபுரம் 5 ஸ்டார் ஹோட்டலில் இந்து முறைப்படித்தான் திருமணம் நடக்கின்றது என விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



  திருமண வீடியோவை தனியார் ஓடிடிக்கு விற்று விட்டார்கள். அவர்கள் இந்த திருமண நிகழ்வை கலர்புல்லாக காட்ட பிளான் போட்டுள்ளனர். இதன் காரணமாகவே இவர்களின் திருமணம் மகாபலிபுரத்திக்கு மாற்றப்பட்டுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  இருப்பினும் திருமண புகைப்படங்களை நாளை மதியம் வெளியிடுவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.



 நாளை திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் #NayantharaWedding என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் நேற்றில் இருந்து தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஏற்கனவே படங்களில் கமிட்டாகியிருப்பதால் திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு செல்லவில்லையாம். மாறாக ஷூட்டிங்கிற்கு செல்லவிருக்கிறார் நயன்தாரா என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தில்.

  திருச்சி மாவட்டம், லால்குடி வடக்குதெருவை சேர்ந்த சிவக்கொழுந்து - மீனாகுமாரி தம்பதியின் மகன்தான் விக்னேஷ் சிவன். விக்னேஸ்வரன் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக விக்னேஷ் சிவன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

publive-image



லால்குடி பூர்வீகம் என்றாலும் சிவக்கொழுந்துவுக்கு சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணி கிடைத்ததால் 1971-ம் ஆண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டார். சிவக்கொழுந்துவின் மனைவி மீனாகுமாரி சென்னை வடபழனி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சிவக்கொழுந்து தற்போது உயிருடன் இல்லை. தாய் மீனாகுமாரி விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகிறார்.விக்னேஷ் சிவன் லால்குடியில் பிறந்து கொஞ்சம் வருடத்திலேயே சென்னைக்கு சென்று விட்டார். இருந்தாலும் லால்குடியில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா உள்ளிட்ட இரத்த பந்த உறவுகள் இன்னும் லால்குடியில்தான் வசித்து வருகின்றனர்.

 

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் குறித்து தெரிந்ததும் உறவினர்கள் எதிர்ப்பு குரலை உசத்தினாலும் அதை விக்னேஷ் தாயார் கண்டுகொள்ளவில்லை என்கின்றனர்.அதேநேரம் லால்குடிகாரர்கள் நயன்தாராவை தங்கள் ஊர் மருமகளாக பார்த்ததோடு மட்டுமல்லாமல், திருமணத்திற்குப் பிறகு ஒருவேளை நயன்தாரா லால்குடிக்கு வந்தால் எந்தந்த கடைகளுக்கு செல்வார் என்பதைக் கூட பட்டியல் போட்டு, மகப்பேறு மருத்துவமனை வரை லிஸ்ட் போட்டு விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்திற்கு தயாராகியிருந்திருக்கின்றனர்.

 

ஆனால் லால்குடியில் இருக்கும் சொந்தங்களையும், ஊராரையும் திருமணத்திற்கு அழைக்க விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் தயாராக இல்லாதது அப்பகுதியினரை வேதனையடையச் செய்திருந்திருக்கின்றது. இதுகுறித்து ஊரார் தெரிவிக்கையில்; விக்னேஷை சொந்தப் பையனாகவே நாங்க பாத்துக்கிட்டோம். அவனோட அம்மா-அப்பா சென்னையில வேலைக்கு போயிட்டதால, அவனையும், அவன் தங்கச்சியையும் ரொம்பவுமே செல்லமா பாத்துகிட்டோம்ங்க. நாங்க ரொம்ப எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தோம், நயன்க்கு கிப்ட் மொதக்கொண்டு ரெடி செய்தோம். ஆனா அவங்க சினிமாக்காரங்க என்பதை காட்டி விட்டனர்.

 

publive-image

விக்னேஷ் ஆசையாய் ஓடி விளையாடி, வளர்ந்த பெரியப்பா-பெரியம்மாவைக்கூட திருமணத்திற்கு அழைக்கவில்லை. விக்னேஷ் சொத்துகள் இங்க கொஞ்சம் இருக்குங்க, விக்னேஷ் அம்மா போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்ததால அவ்வப்போது லோக்கல் போலீஸ் மூலம் சொத்துகள் குறித்து விசாரிச்சுட்டு இருப்பாங்க.தங்க வேலை செய்யும் குடும்பத்திலேர்ந்து பிறந்த தங்கமான பையன் விக்னேஷ்ங்க, அவங்க குடும்பம் லால்குடியில செல்வாக்கான குடும்பம். பாரம்பரியமான பெரிய குடும்பம். இங்க உள்ள சொந்தக்காரங்கள கூப்பிடாம நாளை கல்யாணம் சென்னையிலத்தான் நடக்குதுங்க.

 திருப்பதியில கல்யாணம் என்றபோது நாங்க எப்படி போய்ட்டு வரதுன்னு யோசிச்சோம், ஆனா சென்னையிலத்தான் என்றதும் மகிழ்ந்தோம். நாங்க அவங்க கூப்பிடாம கல்யாணத்துக்கு போனாலும் உள்ள விடமாட்டாங்க போல, அப்படித்தான் நாங்களும் கேள்விப்பட்டோம் என நொந்துக்கொண்டனர்.

 

publive-image

விக்னேஷ் குடும்பத்தில் ஒருவர் தெரிவிக்கையில், விக்னேஷ் நல்லவன்தாங்க, ஊரவும், உறவும் மறக்கலங்க, இருந்தாலும் கல்யாணம் என வந்ததும் எங்க விருப்புக்கு மாறாத்தான் நடந்துக்கிட்டான்ங்க. அவங்க தாத்தா பாலசுப்ரமணியம் காலத்துலேர்ந்து லால்குடியில எந்தவொரு திருமணமா இருந்தாலும் எங்க குடும்பத்துல வேலைப்பாடு செய்து கொடுத்த மாங்கல்யம் தான் மணப்பெண் கழுத்த அலங்கரித்திருக்கும்ங்க. இப்ப எங்க வீட்டு மருமவளுக்கு எங்க கையால தாலி செய்ய முடியாதது வேதனைங்க. எங்க பரம்பரையே தங்க வேலை செய்யறதுதாங்க. காலம்மாறும்போது அங்கொன்றும் இங்கொன்றுமா எல்லாம் பிரிஞ்சு போயிட்டாங்க.

  நாளைக்கு உன் மவனுக்கு கல்யாணம்ன்னும், பங்காளி மவனுக்கு கல்யாணம்ன்னும் ஊரு, உலகமே பேசும்போது நாங்க அங்க போவமுடியாதது வேதனைதாங்க என்றனர்.



  சினிமாக்காறங்க கல்யாணம்ன்னாலும், சொந்தபந்தத்தோடு நடந்தா சந்தோஷமா இருக்கும். விக்னேஷ் சிவன் அம்மா மீனாவோட சொந்தங்ககூட போவாங்களான்னு தெரியலங்க, எது எப்படி வேணா இருக்கட்டும், நம்ம சொந்தக்காரன், ஊர்க்காரன் கல்யாணம், அதுவும் நாடு முழுசும் நல்லா தெரிஞ்ச பொண்ண கட்டிக்கரான், கல்யாணத்த டி.வியில கூட பாக்கமுடியாதபடி பணத்தாசையில கல்யாணம் நிகழ்ச்சியையும் தனியாருக்கு தாரைவார்த்துட்டாங்க, நல்லாயிருக்கட்டும்ங்க, நறைய சினிமாக்கார தம்பதிகள் மாதிரி இல்லாம, சொத்து, பணத்துக்கு மட்டுமில்லாம குடும்பம் நடத்தி புள்ளகுட்டியோட நல்லாயிருக்கணுங்க என்றனர்.



செய்தி; க.சண்முகவடிவேல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment