‘லட்சுமி’ குறும்பட இயக்குநரின் படத்தில் நடிக்கும் நயன்தாரா

மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்ட ‘லட்சுமி’ குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா.

மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்ட ‘லட்சுமி’ குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
nayanthara lakshmi

மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்ட ‘லட்சுமி’ குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா.

Advertisment

கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் வெளியான குறும்படம் ‘லட்சுமி’. லட்சுமிப்பிரிய சந்திரமெளலி, நந்தன், லியோ சிவதாஸ், மாஸ்டர் மிதுன், சசி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கருத்துக்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்பும், ஆதரவும் கிடைத்தது. அதுவும் பாரதியார் கவிதைகளைப் பயன்படுத்திய விதத்திற்காக கண்டனங்கள் குவிந்தன.

ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய அடுத்த படத்தையும் பாலியல் சார்ந்தே இயக்கியுள்ளார் சர்ஜுன். ‘மா’ என்ற இந்தக் குறும்படம், 10ஆம் வகுப்பு மாணவியின் பாலியல் விருப்பத்தைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகவும் சர்ஜுன் மீது பலத்த விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாலியல் சார்ந்த படங்களை எடுத்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார் என்கிறார்கள்.

இந்நிலையில், இவர் இயக்கும் படத்தின் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, ‘அறம்’ படத்தைத் தயாரித்த கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது சர்ஜுன் இயக்கும் இரண்டாவது படம்.

Advertisment
Advertisements

முதல் படமாக ‘எச்சரிக்கை : இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சர்ஜுன். இந்தப் படத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், ‘ஆடுகளம்’ கிஷோர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: