Advertisment

நயன்தாரா, விஜய் சேதுபதி படத்தின் ஷூட்டிங் ஓவர்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில், நயன்தாரா ஜோடியாக விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
நயன்தாரா, விஜய் சேதுபதி படத்தின் ஷூட்டிங் ஓவர்!

நயன்தாரா ஜோடியாக விஜய் சேதுபதி நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ஷூட்டிங், நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

Advertisment

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில், நயன்தாரா ஜோடியாக விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ‘நானும் ரெளடிதான்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இன்னொரு ஜோடியாக அதர்வா - ராஷி கண்ணா நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.  ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார். கேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நேற்றுடன் முடிவடைந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அதர்வா. அத்துடன், விஜய் சேதுபதி, நயன்தாரா, அனுராக் காஷ்யப்புடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

,

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. தற்போது சக்ரி டோலட்டி இயக்கத்தில் ‘கொலையுதிர் காலம்’, நெல்சன் இயக்கத்தில் ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

Tamil Cinema Atharvaa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment